பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி, NCS ஆகிய சேமிப்புத் திட்டங்களின் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. GSec என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களின் மீது அதிக வருவாய் வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்த வட்டி உயர்வை செப்.30 அன்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 7.1% ஆக இருக்கும் பிஎஃப் வட்டி, 7.56% ஆக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் அதிக பயன்பெறுவார்கள்.
Tag: சற்றுமுன்
மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை) கே.ஆர்.எ ராஜேஷ்குமார் (நாமக்கல்) இரா.கிரிராஜன் (வழக்கறிஞர் அணி ), ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .இதற்கான பட்டியலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளர். தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் நேற்று காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார். இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். மே-16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார் .
2015 ஆம் வருடம் திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் அவருடைய தாயையும். மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தாயையும் மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]
தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது இந்நிலையில் குரூப் 2, 2ஏ […]
ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வரும் 13ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெறும் என்று போக்குவரத்து துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் பொருளாதார சூழல் இன்னும் மோசமாகும். அடுத்த 2 நாட்களுக்கு, 10 – 12 மணி நேர […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் கவர்னர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இலங்கையில் தலைமறைவாக உள்ள மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில காவல்துறைக்கும் மத்திய உள் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]
தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தற்போது சிந்தனையாளர் பிரிவு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிந்தனையாளன் சிந்தனையாளர் பிரிவில் மாநில தலைவராக செல்வி கே.தாமு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]
அசானி புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது .
மின்சார பேருந்துகள், மின்சார இலகுரக வாகனங்களை தயாரிக்க ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது. இதற்கு சென்னை அருகே 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மற்ற விழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, கும்பம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகள் ஆனது இரவு தொடங்கி விடியற்காலை வரை நடப்பது வழக்கம். இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியினை வெளியூர்களில் இருந்தும் வந்து பார்ப்பார்கள். இந்நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8-11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் அதில் ஆபாசமான வார்த்தைகளும் நடனங்களும் இருக்கக்கூடாது […]
இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது […]
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமரை பதவி விலக கோரி […]
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்ற இருவரின் நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பு தற்போது […]
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது மீண்டும் வெளிநாடு பயணம் செல்கிறார். அதன்படி ஜூன் மாதம் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் மேலும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வருடன் லண்டன் சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பென்னிகுயிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆவர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து 77.18 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 76.98 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களில் ஒரு ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து மர்ம பொட்டலங்களுடன் பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமமான தானோ கலன் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே என் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட உள்ளதாகவும், 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவி வரும் மின் வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர கடந்த ஆட்சியில் மின் பாதை அமைக்கப்பட்டது. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே மின்வெட்டை சரி செய்ய அரசு விரைந்து […]
மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான போலி சான்றிதழ் உ.பி.யில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவுடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மே 1ம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 இலிருந்து ரூ.10 ஆகவும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தததையடுத்து பல மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தலாமா என்று யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று டெல்லி அணி விளையாட இருந்த நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ரேபிட் பரிசோதனை தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 25 கீழே இருந்த நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியீட்டுக்குள்ள சுற்றறிக்கையில், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் எரி பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது அவருடைய கால்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக் கம்பங்களை வீசினர். இதற்கு அதிமுக மற்றும் பாஜக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுநர் ரவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகளின் உளவு பார்க்கும் பணிக்கு துணை போனவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார். மேகாலயாவில் இன்று தொடங்கும் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கார் டிரைவரும் உயிரிழந்துள்ளார்.
நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பாக ஏப்ரல் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை meeting.online.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மின் மயானங்களைஅமைக்க அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு உடலை எரியூட்ட 450 கிலோ வரை மரக்கட்டைகள் தேவைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா குறைவால் இரண்டு வருடங்களுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களுடைய நம்பிக்கை. இந்த நிலையில் இன்று கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக அழகர் மலையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுக சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளி னார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த […]
இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் இட்லி, வடை சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஆவடியில் நரிக்குறவர் மாணவி வீட்டில் சாப்பிட்ட […]
சென்னை திருமுல்லைவாயலில் சிவசக்தி நகரில் சம்பிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் முதல்வரிடம் உறுதி […]
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்… குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதியன்று (நாளை) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் […]
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை(UNITS) மட்டும் பொதுத்தேர்விற்கும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, பத்தாம் வகுப்பு அறிவியல், பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்து கொள்ள போதுமான நேரம் இல்லாததால் அத்தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி உள்ளனர். இதனால் பொது தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.