தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு பொது மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி […]
Tag: சற்றுமுன்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப்படும். அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை இயங்கவும், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மதுபான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. […]
செப்டம்பர் 17-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி குறைவாக இருப்பதன் காரணமாகவும், வெள்ளிக்கிழமை என்பதனாலும் தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுள்ளது. கடந்த முறை தடுப்பூசி போடப்பட்ட போது தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதலாக டோஸ்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் […]
மும்பையில் பிரபல நடிகர் சோனு சூட்க்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து பல உதவிகளை செய்து இந்திய அளவில் பிரபலமான சோனு சூட் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த நிலையில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு அச்சத்தினால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று இந்த உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழியும் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவ செல்வங்களின் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதனை முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். சமரசமில்லாச் சட்ட போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் சிறப்பு கலந்தாய்வு நாளை தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப் -17 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நாளை தொடங்குகிறது. நாளை முதல் ஆன்லைனிலன் கவுன்சிலிங்க் தொடரும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியானது மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூரி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். இந்நிலையில் மர்ம நபர் யாரோ மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருமண மண்டபம் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு […]
தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி […]
நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் இன்று தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்று அமைச்சர்மா .சுப்பிரமணியன் நேற்று […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகாமை வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒன்று முப்பது மணிக்குள் மாணவர்கள் வந்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் N95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை நாடு முழுவதும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகருக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் கட்டுக்குள் வந்த நிலையில் அங்கிருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் விமான நிலையங்களில் குவிந்ததாலும், அடுத்தடுத்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைகளாலும் விமான நிலையம் சேதமடைந்தது. இதனையடுத்து கத்தார் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் […]
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொடக்க பள்ளிகள் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறிய நிலையில் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படவில்லை. இதற்கு அம்மா உணவகம் சாட்சி என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் […]
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் செல்வம். இவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த போது சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதன் […]
முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தனி நபர்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், தங்களது […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இந்நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி-2 பிரச்சினை தீர்ந்து விட்டதாக தமிழ் திரைப்பட […]
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 13 பேர் அமெரிக்க படையினர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ. எஸ்.ஐ. […]
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே சற்றுமுன் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் […]
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையிலிருக்கும் நடிகை மீராமீதுன் ஏற்கனவே கடந்த ஆண்டு எம்கேபி நகர் போலீசார் பதிவு […]
ஆப்கான் நாடு முழுவதுமாக தாலிபான்களின் பிடியில் வந்ததுள்ளது. இதனால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களும், அந்நாட்டு மக்களும் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட உக்ரேனியர்களை மீட்க வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ் கனி யெனின் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று உக்ரேனை சேர்ந்த மக்களை மீட்க வந்த விமானம் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டு சிலரை ஏற்றிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் போக்குவரத்து சேவை இயங்கும் என்று கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்குழு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல மாதங்களாக திறக்கபடாமல் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் 150க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து வைத்திருப்பதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காபூலில் இருந்து வெளியே விமான நிலையத்தில் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் பலரை […]
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கு பயிருக்கு முக்கிய எதிரி மாவுப்பூச்சி ஆகும். இந்த மாவுப் பூச்சியின் தாக்குதலால் மரவள்ளி கிழங்கு பயிர் விளைச்சல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி அதனுடைய உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று மாவுப்பூச்சி […]
சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களை ஊக்குவிக்க ரூபாய் 200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் திடீரென பள்ளிக்குச் செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தபடும். மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் .மீண்டும் கொரோனா […]
சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏனெனில் செப்டம்பர் 13-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து அலுவல்களையும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட், புதியம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஆர். பி உதயகுமார் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், நகை கடன், பயிர்கடன்களில் உள்ள முறைகேடுகளை சரி செய்த பிறகு அவை அனைத்தும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்பதாக அறிவித்தீர்கள். ஆனால் ஏதாவது கொடுத்தீர்களா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் […]
நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீராமீதுனை சென்னை அழைத்து வந்துள்ளனர். […]
தமிழகத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 எனப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் கடல் நீர் நகரங்களுக்குள் புகுந்துள்ளதால் கடல்நீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.