Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு…. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பல வகையான கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் $69,000 ஆக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது $55,406 ஆக சரிந்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 6 பேர் பலி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம்…. மத்திய அரசு அனுமதி…!!

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் மேலும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்….!!!!

தமிழகத்திற்கு நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலையிலேயே நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் அது உருவாக மேலும் காலதாமதம் ஆகும் என தற்போது தெரியவந்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வேதா இல்லம் யாருக்கு…? இன்று பரபரப்பு தீர்ப்பு…!!!!

ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று  நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அரசுடைமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தீர்ப்பளிக்கிறார். தங்களின் கருத்து கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தீபக், தீப தரப்பு தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த விலைக்கு தக்காளி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டு…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு …!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிலிருந்து காலை 7 மணி அளவில் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளன.ர் இதனையடுத்து மதராஸ்-காஸ்கன்ச்  இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியது அவர்களின் செல்போன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நீதிமன்றத்திற்கே இந்த நிலையா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெள்ளம் நீர் போல தேங்கி காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .நீதிமன்றத்திற்கே இந்த நிலைமை என்றால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!

சேலம் மாவட்டம் அருகே இன்று அதிகாலையில் கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நவ.25, 26, 27 ஆகிய நாட்களில்…. மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!!

தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 25 ஆம் தேதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING: பிரீபெய்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துகிறது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணங்கள் நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரம்…. முதல்வர் அதிரடி பேச்சு…!!!!

கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் ரூ.13,413 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்ய வந்துள்ள தொழிலதிபர்களுக்கு நன்றி. சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் 3வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டு மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.21 கோடியில் பொள்ளாச்சியில்…. முதல்வர் அதிரடி…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 கோவையில் நடைபெற்று வருகிறது. 3,928 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ரூபாய் 485 கோடி மதிப்பில் 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ரூபாய் 35, 208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7 மாவட்டங்களில் கனமழை…. அலெர்ட்டா இருங்க மக்களே…!!!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நவம்பர் 25,26,27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தென்மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.35,208 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 கோவையில் நடைபெற்று வருகிறது. 3,928 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ரூபாய் 485 கோடி மதிப்பில் 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ரூபாய் 35, 208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: எஸ்ஐ கொலை: விரைவில் சிறப்பு சட்டம்…. அண்ணாமலை இரங்கல்…!!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார். பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. சற்றுமுன் திடீர் பரபரப்பு…!!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், ராஜஸ்தானிலும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் நாளை நடைபெறும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து…. சற்றுமுன் தோனி அறிவிப்பு…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எஸ் தோனி, எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி டி20 போட்டி. எங்கு ஐபிஎல் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். சென்னையும், தமிழ்நாடும்  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: தோல்வியில் தான் நாங்கள் கற்று கொண்டோம்…. தோனி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், எம்.எஸ் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நானும் என் தந்தையும் தோனி ரசிகர்கள்…. முதல்வர் பெருமிதம்…!!!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை…. திடீர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கனமழை மற்றும் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

BREAKING: மாணவர்களே! இந்த மாவட்டத்தில் நாளை…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பதூர் மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUST IN: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஜெய் பீம்: சாதி பிரச்சினை இல்லை…. சமூக பிரச்சினை – அன்புமணி…!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: இது விவசாயிகளின் மாபெரும் வெற்றி…. சீமான் கருத்து…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்தவகையில் நாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி…. முதல்வர் வலியுறுத்தல்…!!!

புதிய திருத்தங்களோடு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை  பிரதமர் மோடி அவர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு அரசியல்  கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப் போராட்டத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை மறுநாள் தமிழகம் வரும் மத்தியகுழு…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, மழை வெள்ளம்  தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில்  தமிழகத்தில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை  ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

JUST IN: இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி…. நடிகர் கார்த்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 7 ஆண்டுகளாக தான் எடுத்த எந்த ஒரு முடிவில் இருந்து பின் வாங்காத பிரதமர் மோடி விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வட தமிழக கடலோர, ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் கன […]

Categories
கள்ளக்குறிச்சி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

JUST IN: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…. பள்ளி-கல்லூரிகளுக்கு லீவு…!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: நீலகிரி மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 18 கி.மீ வேகத்தில்…. நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் லீவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 7  மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனால் இன்று ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஜெய் பீம்- ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்…. சீமான் கருத்து…!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெள்ள சேதம்…. தமிழகம் வருகிறது மத்திய குழு…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, மழை வெள்ளம்  தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில்  தமிழகத்தில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை  ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது. உள்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 15 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு…. நாளை தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்த கொலை வழக்கில் திமுக எம்பி […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதி கனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் நாளை(18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JAI BHIM: சற்றுமுன் நடிகர் சூர்யா திடீர் அறிவிப்பு…!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன்: செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 29-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வும், டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் நேரடி செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி வரும் 13ம் தேதி நடக்க இருந்த தேர்வுக்கு பதிலாக டிசம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி…. ஜனாதிபதி ஒப்புதல்…!!!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி இடமாற்றம் செய்யக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்றும் கொலீஜியம் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் சர்மா மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியும்,கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகளை நியமித்தும் ஜனாதிபதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

பொறியியல் செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 29-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வும், டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெற இருந்த நிலையில் தற்போது தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ALERT: 4 மாவட்டங்களில் – சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: யாரும் வெளியே போகாதீங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 6 மணிக்கு…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை  செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories

Tech |