Categories
உலக செய்திகள்

முதலில் மாலத்தீவு…. பின்னர் சிங்கப்பூர்…. அடுத்து சவுதி…. பயந்தோடும் கோத்தபய ராஜபக்சே….!!!!

நாடு நாடாக தப்பியோடும் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கடைசியாக சவுதி அரேபியாவுக்கும் செல்லவிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பேரெழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜினாமாவை எதிர்பார்த்து இலங்கை மக்கள் காத்திருக்கும் போது கோத்தபய நாடு விட்டு நாடு விமானத்தில் பறக்கிறார். கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று […]

Categories
உலக செய்திகள்

சவுதி மன்னருக்கு உடல் நல பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி….!!!

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்-ற்கு 86 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவர் ஜெட்டா நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னருக்கு, இதற்கு முன்பே கடந்த 2020-ஆம் வருடத்தில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த மார்ச் மாதம் இதய பிரச்சனைக்கும் சிகிச்சை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடக்கடவுளே….! வாட்ஸ்அப்பில் இந்த எமோஜி அனுப்பினால்…. 5 ஆண்டு சிறை தண்டனை… எச்சரிக்கும் அரசு..!!

வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை  அனுப்பினால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக புகார் வந்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதன்படி இத்தகைய ஆட்சேபனைக்குரிய குறியீடுகள் வாட்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“பழிக்கு பழி பாவமில்லை”…. கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ஹவுத்தி…. எரிமலையாய் வெடித்த மோதல்….!!!!

ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி கூட்டுப்படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி நாட்டின் தெற்கில் உள்ள ஜசான் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஏமன் குடியிருப்பாளரும், ஒரு சவுதி குடிமகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெங்காலி குடியிருப்பாளர், ஆறு சவுதி அரேபியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இரண்டு கடைகள் மற்றும் 12 கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya […]

Categories
உலக செய்திகள்

“கடவுள் நம்பிக்கையில் தலையிடாதீர்கள்…. ட்விட்டரில் வந்த பதிவு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சவுதி மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளில் தலையிடுவதை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்துமாறு டுவிட்டரில் பதிவிட்ட ஏமன் நாட்டை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏமன் நாட்டில் வசித்து வரும் அலி அபு என்பவர் ட்விட்டரில் சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதாவது டுவிட்டரில் சவுதி அரசாங்கம் அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளை சீண்டுவதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அலி […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ரொம்ப அநியாயம்..! 26 வயது இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை… சர்வதேச சமூகம் கொந்தளிப்பு..!!

சவுதியில் 26 வயது இளைஞனுக்கு 17 வயதில் செய்த குற்றச் செயலுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் வசித்து வந்த முஸ்தபா ஹசீம் அல் தரவிஷ் என்னும் இளைஞன் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது, 2011-2012-ம் காலகட்டங்களில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் அவருடைய செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது. சவுதி காவல்துறையினர் அவருடைய செல்போனில் இருந்த அந்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு கடந்த […]

Categories
உலக செய்திகள்

இராணுவத்தளத்தில் தாக்குதல் நடத்திய சவுதி மன்னர்.. ஹவுத்தி போராளிகள் குழு தகவல்..!!

ஹவுத்தி போராளிகள், விமான தளத்தில் ட்ரோன் மூலமாக சவுதியின் மன்னர் காலித், தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது.  தெற்கு சவுதியின் Khamis Mushait ல் இருக்கும் மன்னர் காலித், ராணுவ விமான தளத்தில் ட்ரோன் வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி கூறியிருக்கிறது. ஆனால் சவுதி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. சவுதி மீது ஹவுத்தி போராளிகளின் தாக்குதல் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. இதில் பல தாக்குதல்கள் தடுக்கப்பட்டுவிட்டது. எனினும் நாட்டின் தெற்கு பகுதியை ஏவுகணைகள் சில தாக்கியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோன்.. திடீரென்று தாக்கும் சவுதி போர் விமானம்.. வெளியான வீடியோ..!!

ஹவுத்தி, சவுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சவுதி அதிகாரிகள் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் அதன் எண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். ஹவுத்தி மலைப்பகுதியில் ட்ரோன் ஏவியுள்ளது. சவுதியின் போர் விமானமான F-15 இந்த ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது. https://twitter.com/MbKS15/status/1376901175237300230 இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் ட்ரோன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

சனா மீது தாக்குதல் நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப்படை…காரணம் என்ன? வெளியான வீடியோ காட்சிகள் ..!!

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் நாட்டின் தலைநகரமான சனா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் ஹவுத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சனாவில் நடத்தப்பட்ட வான்வழி  தாக்குதலில் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. video of the destruction of Houthi ammunition depot/warehouse pic.twitter.com/IlckJP4jmu — Al33MK Khan – 🇵🇰 (@Al33mK) March 21, […]

Categories
உலக செய்திகள்

சவுதி சர்வதேச விமான நிலையம்… மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல்… பரபரப்பு..!!

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சர்வதேச விமான நிலையம் மீதும், மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் ஹவுத்தி ஆயத்து படையின் செய்தியாளர் கூறியள்ளார். இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு 2014 முதல் ஜனாதிபதி ஆப்த் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கியது. தென்மேற்கு பகுதியில் உள்ள சவுதி தலைமையிலான அரசு நாடுகளின் கூட்டுப் படை ஏமன் உள்நாட்டுப் போரில் […]

Categories
உலக செய்திகள்

சவுதி பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட வழக்கில்… சவூதி இளவரசர் மீது அமெரிக்கா அதிரடி குற்றசாட்டு .!!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் அந்நாட்டு இளவரசர் முஹம்மத் பின் சுல்தானின் உத்தரவினால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இளவரசர் முஹம்மத் பின் சுல்தான் மீது அமெரிக்கா ஜோ பைடன் நிர்வாகம்  எந்தவித தயக்கமுமின்றி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பைடன் நிர்வாகம், கசோகி கொலை வழக்கு தொடர்பாக […]

Categories

Tech |