இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்கா சவூதி அரேபியாவில் உள்ளது. இந்த நிலையில் மெக்காவின் கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அதன்பின் அந்த பகுதியில் உள்ள வானம் வெளிச்சமாக மாறியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. […]
Tag: சவூதி அரேபியா
சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்ட கால ஆலோசராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் “எம்பிஎஸ்” என்று அழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அல்ஜப்ரி கூறியது, எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள ‘புலிப்படை’ என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். எம்பிஎஸ் தனது மக்களுக்கும், அமெரிக்கரர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிபிஎஸ் ஒரு மன நோயாளி, பச்சாதாவம் இல்லாதவர், […]
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் வியக்க வைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி சவுதி அரேபியாவில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் பழக்கம் உள்ளது. அங்கிருக்கும் நடைமுறை மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும். அங்கு இருக்கும் நடைமுறை என்னவென்றால், திருமணமான பெண்கள் காபி குடிப்பதை கணவர்கள் தடுக்கக் கூடாது. அப்படி கணவர் காபி குடிப்பதை ஒருவேளை தடுத்தால் அந்தப் பெண் விவாகரத்து வாங்கி விடுவாராம். இந்த காபியால் விவாகரத்து ஆன சம்பவங்கள் நிறைய உள்ளது. இதனைப் […]
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சகமானது, தலைநகர் ரியாத்தில் இருக்கும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனினும், நல்லவேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் சவுதி அரேபியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் ஆற்றல் விநியோக பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை கெடுக்கும் நோக்கத்தோடு இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவிலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த தொற்று பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவிற்கு, ஒரு நபர் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு, ஓமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, அவரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தனிமைப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் […]
சவூதி அரேபியாவில் துப்பாக்கிச்சூடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக மோனா என்பவர் பணியாற்றி வருகிறார். சவூதி அரேபியாவில் மோனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே தனது தந்தையுடன் வேட்டைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு செல்லும்போது அங்கு நடைபெறும் துப்பாக்கிச்சூடுகளில் அவருக்கு மிகவும் ஆர்வம் எழுந்துள்ளது. இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சவூதியில் உள்ள துப்பாக்கிச்சூடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக தற்போது பணியாற்றி வருகிறார். […]
எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டை சவுதியின் கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனையடுத்து சவுதியின் கூட்டுப்படைகள் ஹவுதி தீவிரவாதிகள் மீது வான் வழியாகவும் நிலம் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி […]
கொரோனா பரவலின் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவியிருந்தது. அப்போது சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம், எகிப்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து […]
சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் 3 ஆண்டுகள் பயணத் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதில் சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் அவர்களின் சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
ஓமன் நாட்டின் மன்னர், சவூதி அரேபிய மன்னரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் நாட்டின் அரசரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட், சவுதி அரேபியாவிற்கு அரச காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கிறார். அப்போது சவுதி அரேபியாவின் அரசர் மற்றும் இரண்டு புனிதப் பள்ளிவாசல்களுக்கு காப்பாளரான, சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சந்திப்பின் போது, ஓமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையேயான தரைவழிப் பாதை பணி விரைவாக […]
சவுதி அரேபியாவில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன்பு பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்குள்ளேயே தற்போது மீண்டும் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஹவுத்தி குழுவின் ஏவுகணைகள் தெற்கு நகரமான ஜிசானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நகரின் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளது. […]
கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிய கொரோனாவுடன் மக்கள் போராடி வரும் நிலையில், சமீபகாலமாக பகொரோனா தொற்று திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் இந்தியா […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
தனியார் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரம் இரு முறை விடுமுறை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் தனியார் துறை நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்பட 70 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. […]
கோடீஸ்வர இளம்பெண் தன் கார் ஓட்டுனரை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வர பெண் Sahoo bint abdullah al-mahboob. இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு மக்கா மதினாவிலும் அதிகப்படியான சொத்துக்கள் உள்ளன. மேலும் பிரான்ஸ் போன்ற சில நாடுகளிலும் இவருக்கு சொத்துக்கள் உள்ளதாம். இந்நிலையில் இவர் தன் கார் ஓட்டுநரான பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் […]
சவுதி அரேபியாவில் 7 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக மக்காவில் உள்ள பெரிய மசூதியில் தினசரி தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாத்தின் புனித இடமாக திகழும் மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது ஏழு மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக சவுதி அரேபியா தனது குடிமக்கள் மற்றும் நாட்டிற்குள் வசிப்பவர்களை தினசரி தொழுகை நடத்துவதற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் உம்ரா செய்வதற்கு […]
மருத்துவமனைகளில் இருந்து பச்சிளம் குழந்தைகளைத் திருடி சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சவூதி அரேபியாவில் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி லத்தீப் மருத்துவமனையிலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலும் மரியம் என்ற பெண் செவிலியர் வேடமிட்டு மூன்று ஆண் குழந்தைகளை திருடியுள்ளார். ஒரு குழந்தையின் பெயரை மட்டும் கணவரின் அனுமதியுடன் குடும்ப […]
சவூதியில் இனி பிரம்படி தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சவுதி அரேபியா உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அமைப்பிலிருந்து பிரம்படி தண்டனையை நீக்குவதற்கான உத்தரவை செயல்படுத்தியுள்ளது. சவுதியில் உயர்நிதிமன்றத்தின் பொது ஆணையம் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சிறை, அபராதம் அல்லது இரண்டின் கலவையாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரம்படி தண்டனையை நீக்குவது என்பது நீதித்துறையை நவீனமயமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஷரியா இஸ்லாமிய சட்டத்தில் பிரம்பினால் அடிப்பது தாஜிர் வகையின் கீழ் வருகின்றது. அதாவது […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். உணவு தொடர்பான அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் 1,885 பேர் […]