தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கழிவு நீர் கால்வாயில் மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் வேடிக்கையாக பார்த்தனர். தூத்துக்குடி மாவட்டம் சிவன் கோவில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் ஓடை ஒன்று உள்ளது. அந்த கழிவு நீர் ஓடையில் திடீரென்று 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றாக மிதந்து வந்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பணத்தை எப்படி எடுப்பது என்று சிலர் யோசித்துக் கொண்டிருக்கும் […]
Tag: சாக்கடை
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். இவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள், சத்துக்களும் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நோய்களும் பரவி வரும் சூழலில் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. எனவே நாம் மார்க்கெட் செல்லும் பொழுது மிகவும் சத்து நிறைந்த கீரைகள் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்து வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு […]
சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் […]
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது புத்தக்கேரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாதாளச் சாக்கடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடைப்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்ததால், நகராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பகுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4 ஊழியர்களை அங்கே வரவழைத்து அவர்களை சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு கூறினர். அதன்படி அவர்களும் சாக்கடைக்குள் ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர். […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை ஒன்று உள்ளது. இதுபோன்ற மெக்கானிக் கடைகள் பொதுவாகவே சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான் மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் அப்படியே சாக்கடைக்குள் செல்லும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்து பாதாள சாக்கடையில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடையில் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும் மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த […]
தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதும், அதனால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் ராஜன் சையல் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துக்குமார், அப்பு ஆகிய இருவரும் இறங்கி சுத்தம் […]
சாக்கடையில் கிடந்த மணி பர்ஸை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் உள்ள வீதிப் பகுதியில் காலை 6 மணியளவில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் வெள்ளையன், அய்யப்பன் ஆகிய 2 பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் சாக்கடையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்ததை அவர்கள் 2 பேரும் பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் பர்ஸை திறந்து பார்த்தபோது அதில் […]
சாக்கடையில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் பகுதியில் சின்னண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு எதிர்பாராமல் அங்கிருந்த சாக்கடையில் தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து சின்னண்ணன் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ்க்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் விழுந்த அந்த பசுமாட்டை பாதுகாப்பாக […]
சாக்கடைக்குள் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூரில் பெரும்பாலான குதிரைகள் நடு ரோட்டிலேயே சுற்றித் திரிகின்றது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மொடச்சூர் சுப்பு நகரில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குதிரை சாலையோரம் முளைத்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனையடுத்து திடீரென குதிரை கால் தவறி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடைக்குள் இருந்து வெளியே […]
திருப்பத்தூரில் இடியுடன் கூடிய மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணிக்கு பலத்த கனமழை பெய்தது. இதனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதனால் தாழ்வான […]
கொலம்பியாவை சேர்ந்த தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வருகின்றனர். மரியா கார்சியா மற்றும் என்பவர் வாழ்ந்து வருகின்றனர். இவரின் கணவர் மிகுவல் ரோபோ. இந்த தம்பதிகள் போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யும் மெண்டலின் தான் முதல் முதலில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவருக்கும் போதை பழக்கம் அதிகமாக இருந்தது. ஆழ்ந்த துயரத்தில் இருவரும் இருந்தனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் இவர்கள் ஆறுதலாக இருந்து வந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்ட இவர்களுக்கு உதவி செய்ய யாரும் […]
சசிகலாவை சாக்கடை உடன் ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை […]