திற்பரப்பில் சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. பிரபல சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகின்றது குமரி. இதில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் அவ்வபோது சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புறிந்தனர். மேலும் அங்கு குளித்து மகிழ்ந்தார்கள். தற்பொழுது நீர்வரத்து கோதை ஆற்றில் மிதமாக பாய்வதால் அருவியின் மேற்பகுதியில் இருக்கும் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் […]
Tag: சாரல் மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற இரண்டு நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பகலில் நேற்று சாரல் மழை பெய்துள்ளது. நார்த்தமலை பகுதியில் லேசாக தூரல் மழை பெய்துள்ளது. அங்கே பெரிய அளவு மழை பெய்யாததால் மக்கள் கவலை அடைந்தனர். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மூலவைகை ஆற்றின் பிறப்பிடமாக வெள்ளிமலை வனப்பகுதி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகமானது அப்பகுதி […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் இந்த வருடம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கத்திரி வெயில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்துள்ளது. அதேபோல் […]
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. தற்போது அங்கு குளுகுளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் லேசான வெப்பம் நிலவியது. இதையடுத்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு […]