காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்ததையடுத்து […]
Tag: சாராயம் கடத்தல்
இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சாராய கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று அதிகாலையில் கீழ்வேளூர் – கச்சனம் சாலை பகுதியிலுள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தீவிர […]
சட்ட விரோதமாக தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கையில் பையுடன் வந்து கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் கண்டத்தை பகுதியில் […]
சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் சந்தேகப்பட்டு நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் உலகப்பாடி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் மற்றும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முருகேசனும், சரவணனும் சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நாகூர் காவல்துறையினர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த […]
லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர். புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் […]