நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம், பிரபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனையடுத்து கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
Tag: சாராயம் பறிமுதல்
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இணைந்து கல்வராயன் மலை அருகில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 400 கிலோ வெல்லம் முட்டை மற்றும் 500 […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவர்களிடமிருந்து மொத்தமாக 7, 050 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியாலூர் தனிப் பிரிவு காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஈச்சங்காடு கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக பேரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துவிட்டனர். பின்னர் இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பவர் […]
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து, 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்துள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சுவதாக சேர்ந்தமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உடனடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சாம்பவர்வடகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரும் கடையாலுருட்டியை சேர்ந்த சாமிசங்கர் (55), மயில்ராஜ் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தெற்குப்பட்டி வனத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 16 பேரல்களில் 3,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை […]
8 ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பகுதியில் புகைமூட்டம் வெளியேறுவதை கவனித்த காவல்துறையினர் அந்த இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கே கும்பலாக மர்ம […]
டிராக்டரில் கடத்தி சென்ற 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குரக்கன் தாங்கள் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் காவல்துறையினர் குரக்கன் தாங்கள் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தும் படி சைகை செய்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வண்டியை அங்கையை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனை […]