சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான ஒரு குழு கல்வராயன் மலை வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துரூர் கிராம ஓடை அருகே பெரிய பேரல்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் பேரல்கள் இருந்த இடத்திற்கு சென்று […]
Tag: சாராய ஊறல் அழிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம், பிரபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனையடுத்து கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது காட்டுப்பகுதியில் பேரல்கள் மற்றும் குடங்களில் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி, தாளக்கொல்லை, முனியன் கோவில் மற்றும் காவக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியிலுள்ள புதர் மறைவில் 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களிலிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அவற்றை தரையில் ஊற்றி […]