Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓய்வுநிதியைத் தாங்க…! நூதன முறையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்… 535 பேர் அதிரடி கைது..!!!

போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

மழை நிவாரணம் வழங்குங்கள்… விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு..!!!

மழை நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயம் கூலி தொழிலாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதானம்-சீர்காழி சாலையில் மறியலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதிங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்… தாசில்தார் பேச்சுவார்த்தை..!!!

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் சாலையில் விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது சென்ற சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் 210 வீடுகளுக்கு அகற்றுவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் வேட்டவலம் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இருக்கும் பகுதிகளில் 20 அடிக்கு மேல் வீடு, கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்திருக்கும் பகுதிகளில் மூன்றடி மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை”… மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல்….!!!!!!

ஆதி திராவிட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி இருக்கும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை. மேலும் போதுமான ஆசிரியர்களும் இல்லை என […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்”…. பெருந்துறை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இருக்கும் மார்க் டிரண்ட்ஸ் என்ற பர்னிச்சர் கடைக்கு சென்று சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக 5 லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு வாங்கி இருக்கின்றார். இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் செந்தில்குமாரின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நடைபாதை வியாபாரிகள் சாலை மறியல்”…. பல்லடத்தில் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

சாலையோர கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டி அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை போடக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள்

“சாராய விற்பனையை தடுக்காத போலீஸ்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!!!

போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே கேட்பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை கூறியும் போலீசார் சாராய விற்பனையை தடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாண்டவபுரம் கடைவீதியில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர் சேர்க்கையில் முறைகேடு”…… சாலை மறியலால் பரபரப்பு….!!!!!

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊர்களில் சுற்றி திரியும் பன்றிகளை பிடியுங்கள்”…. சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

பன்றிகளை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையிலும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சுகாதாரக் சீர்க்கேடு, பயிர்களை நாசப்படுத்துவதால் ஊராட்சி மன்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்”…. போலீசார் பேச்சுவார்த்தை…!!!!!!

விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வராத பேருந்துகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!!!!

கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார்  விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சாலை பணியை சீக்கிரம் முடிங்க”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்….!!!!!!!

ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவிற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை”…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…..!!!!!!

தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை”….. வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று 42 வது வார்டு கவுன்சிலர் தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு இழப்பீடு தரணும்”… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கென விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையுள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று முன்னறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள பூந்தாழை சாலையிலுள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக அப்புறப்படுத்த வந்தனர். இந்நிலையில் 4 வழிச்சாலை பணிக்காக முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இப்போது குடியிருப்பு மற்றும் விவசாய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வராமல் தவித்த கத்தலூர் ஊராட்சி பொதுமக்கள்”….. காலி குடங்களுடன் சாலை மறியல்….!!!!!

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்…. சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

அடிக்கடி நேரும் விபத்துகளால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கார்குடல் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம், வேல்முருகன், சுப்பிரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையம் அருகே நூர்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலக்கிறது”…. கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்….!!!!!

பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு…. “நடுரோட்டிலேயே வைக்கப்பட்ட சாமி சிலை”…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயற்சி”… நடுரோட்டில்அமர்ந்து மறியல்… பெரும் பரபரப்பு….!!!!

பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுக்கா கீழ் ஆலத்தூர் அடுத்துள்ள நாகல் காலனியில் வசித்து வருபவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி கலையரசன் (32). இவருக்கு 2 மனைவிகள் 30 வயதுடைய கலையரசி, 29 வயதுடைய சீதா. இவர்களின் உறவினர் 27 வயதுடைய மரியா. இவர்களின் குடும்பத்திற்கும் மற்றொரு தரப்பினர்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலையரசன் டைல்ஸ் ஒட்டும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக் கொலை… உறவினர்கள் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள்”… விவசாயிகள் சாலை மறியல்…!!!!

நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள் நடப்பதால் சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியில் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றார்கள். அங்கு முதலில் கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டு கடைசியாக வருபவர்களின் மூட்டைகள் வெளியே அடுக்கப்பட்டு முதலில் கடைசியாக கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகளை எடை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாடு விடும் விழாவை நடத்தக்கூடாது…. ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

மாடுவிடும் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் தாலுகாவில் உள்ள மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பாக இரு வேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஊர் மேட்டுக்குடி நவீன்குமார் தரப்பினர் மாடு விடும் திருவிழாவுக்கு முறையாக அனுமதி  வாங்கினர். ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி தங்கள் தரப்பினரை இந்த மாடு விடும் விழாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1 மாசமா வரல…. “குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்”….. போக்குவரத்து பாதிப்பு..!!

திருவெண்ணெய்நல்லூர் அருகில் தண்ணீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். திருவெண்ணெய்நல்லூர் அருகில் பெரியசெவலை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சாலை தெரு, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, குட்டை தெரு ஆகிய பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிதண்ணீர் வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் ஒன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories
மாநில செய்திகள்

சாலை மறியல்: விஜய் ரசிகர்கள் மீது தடியடி….. பெரும் பரபரப்பு….!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை 11 மணியளவில் அண்ணா பாலம் அருகே தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட விவசாயி… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீஸ் வழக்குப்பதிவு…!!!

கொலை செய்யப்பட்டதற்காக சங்கராபுரம் சாலையில் மறியல் செய்த 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய விவசாயி அரசு. முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்தார்கள் இவரை கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அரசு படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அரசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் கொடுக்கல…. 100 நாள் வேலை அட்டை வழங்காத அதிகாரி…. சாலைமறியலில் பணியாளர்கள்….!!

அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாலைப்பணிகளை தொடங்க வேண்டும்” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது புழுதி பறக்கிறது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தொழிலாளியை குத்திய நபர்களை… கைது செய்யுங்க… தீக்குளிக்க முயற்சி செய்த வாலிபர்…. கடலூரில் பரபரப்பு…!!

தொழிலாளியை குத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு தரப்பினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் அய்யாசாமி தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வரதராஜ் தரப்பினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாசாமி  தரப்பை சேர்ந்த 45 வயதான பழனி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

½ மணி நேரம் மட்டுமே குடிநீர்… இதுபோதாது… காலி குடங்களுடன் சாலையை மறித்த மக்கள்..!!

சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு சீட் கிடைக்காததால் அதிர்ச்சி” கணவன் எடுத்த விபரீத முடிவு…. கடலூரில் பரபரப்பு…!!

மனைவிக்கு சீட் கிடைக்காததால் கணவன் தற்கொலை முற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தி.மு.க வை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். ஆனால் கட்சி நிர்வாகம் தி.மு.க கவுன்சிலர் சுந்தரியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இருப்பினும் சுந்தரிக்கு எதிராக கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த கொடிக்கம்பத்தை காணோம்”…. போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்…. பெரும் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இவர்களது கொடிக்கம்பம் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வருவாய் கோட்டாட்சியர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” கொடி கம்பத்தை காணவில்லை ” விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக  சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆங்கிலேயர் கால கட்டிடத்தை இடிங்க” மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பழைய கட்டிடத்தை இடிக்குமாறு மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றமொன்று இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் அங்கு சென்று விளையாடுவது சாப்பிடுவது என கட்டிடத்தின் ஆபத்தை உணராமல் அங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” விடுதலை செய்யுங்க ” பாலியல் தொல்லையில் ஆசிரியர் கைது…. மாணவிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும்  12 ஆம்  வகுப்பு  மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி ஆசிரியர் மீது  பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஆசிரியர்  ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 12. ஆம வகுப்பு மாணவிகள் சிலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” நடவடிக்கை எடுங்க ” அ.தி.மு.க “வினரின் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வண்ணார்பேட்டை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க  கட்சியின் வட்ட செயலாளர் துரை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தி.மு.க கட்சியின் தொண்டர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்…. 3 பேருக்கு கத்திகுத்து…. நாமக்கலில் பரபரப்பு….!!

இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக பரபரப்பு புகார் […]

Categories
அரசியல்

பேனரை கழட்டுங்கனு சொன்னது குத்தமா….? 50 பேருடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்…. பரபரப்பு சம்பவம்….!!!

வாக்குப்பதிவு மையம் அருகே இருந்த திமுக பேனரை காவல் துறையினர் அகற்ற கூறியதால் அதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இருபத்தி ஆறாவது வார்டில் அஸ்ரா சுல்தானா என்பவர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே இவரை ஆதரித்து அப்பகுதியில் உள்ள தேர்தல் வாக்கு சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் திமுகவின் பிரச்சார பேனர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை கொடுங்க…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கிராம மக்கள்  100 நாள் வேலைத்திட்டத்தை வழங்குமாறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் சரியான முறையில் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும்” கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

 கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதிக்கு அருகில் உள்ள சிங்கவனத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சிங்க வனத்தை சுற்றியுள்ள நிலையூர், திணையாகுடி, காரைக்கோட்டை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களை இங்கு வந்துதான் விற்பனை செய்கின்றனர்.  இந்த கொள்முதல் நிலையத்தில் குறைந்த அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார்  200 ஏக்கருக்கும் மேல் சுற்றியுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிப்பதற்கும் தண்ணீர் இல்ல…. வேதனையடைந்த பொதுமக்கள்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் இணைப்பு செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள உலகநாதபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளின் மூலம் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வாராமா தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் ஆத்திரம்…. சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மொட்டனூத்து அருகே உள்ள ராமசந்திராபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமசந்திராபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினர்…. 79 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு…!!!

ஆர்எஸ்எஸ் நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இலுப்பூரில் பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பெண்கள் உட்பட 79 பேரை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலுப்பூர் அருகே இருக்கும் திம்பம்பட்டியில் இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற கிறிஸ்தவ பெண்கள் இருவர், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் கணேஷ் பாபு அவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்கள் இருவரும், தங்களுடன் வாக்குவாதம் செய்ததோடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவிரி குடிநீர் மட்டும் வேண்டும்…. பொதுமக்கள் கோரிக்கை….. பேரூராட்சி அலுவலகம் முற்றுகை….!!

காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யும்படி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கோரையாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு காவிரி குடிநீர் மட்டும் விநியோகம் செய்யும்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் […]

Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு எதிராக சாலை மறியல்…. கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-வால் பரபரப்பு…..!!!

திமுக ஆட்சியை எதிர்த்து சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க எம்எல்ஏ ரகுராமன் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார். விருதுநகரில் இருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழராஜகுலராமன் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நியாய விலை கடையின் விற்பனையாளர் முறைகேடு செய்கிறார் என்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரனிடம் புகார் அளித்த மக்களை, அவர் இனரீதியாக கடும் […]

Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டை துப்பாக்கி சூடு…. சிறுவனுக்கு சிகிச்சை…. பொதுமக்கள் சாலை மறியல்….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்ததை கண்டித்து, […]

Categories

Tech |