மத்திய பிரதேச மாநிலத்தில், சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்து வந்த வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வீட்டில் இருந்து சேரும் சகதியுமாக இருந்த பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியிலேயே 25 வயது இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: சாலை வசதி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை இடுகாட்டிற்க்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லதுரையின் உறவினர்கள் பட்டுக்கோட்டை பேராவூரணி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை விலைநிலம் வழியாக தூக்கிச் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, அழகு கூட்டமாவிலை, காட்டுவிலை உட்பட ஏழு கிராமங்களில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வரக் கூட வழி இல்லாததால் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் அங்கிருந்த ஒத்தையடி பாதையிலும் மரக்கன்றுகளை நட்டு பாதையை இல்லாமல் செய்துள்ளது. இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள […]