கார்களை ஏற்றி கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுனர் பிரவின் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி கட்டமேடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடி முன்புறத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியுள்ளது. இதனையடுத்து இவ்விபத்தில் சரக்கு வேன் […]
Tag: சாலை விபத்து
கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சிறுவனின் புகைப்படம் மற்றும் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. லண்டன் Bromley நகரில் கடந்த 18ஆம் தேதி கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற காரின் டிரைவரான 20 வயது இளைஞனை கைது செய்தனர். இந்நிலையில் […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தன்னுடைய மனைவி லட்சுமியுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது […]
சாலையை கடக்க முயற்சி செய்த பெண் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை பகுதியில் அமைந்திருக்கும் பெற்றோல் நிலையத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பத்மா மீது […]
சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடவிளாகம் கிராமத்தில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநரான இவர் மாலை நேரத்தில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையில் வந்த மினி லாரி மீது சதீஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனை அடுத்து இவ்விபத்தில் […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிக்சை பெற்று வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் லயோலா மற்றும் நளினிம்மா ஆகிய 2 திருநங்கைகளும் கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த காரை ஓட்டுனர் பிரவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாய் அருகாமையில் கார் வந்து கொண்டிருக்கும் போது கால்நடை விலங்கு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் கால்நடை விலங்கு மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மீது கார் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பகுதியில் மரியாஜ் ஜெனிபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஸ்கூட்டியில் சாலையில் கரசங்கள் கலனி அருகாமையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கும் போது படப்பையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மின்னல் வேகத்தில் ஸ்கூட்டி மீது மோதியுள்ளது. இந்நிலையில் ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியாஜ் […]
காவல்துறை அதிகாரியின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் துரைசாமி. இவருக்கு தமிழ்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணிக்காக பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மாட்டுக்காரன் ஊர் பகுதியில் எதிர்பாராவிதமாக சாலையில் உள்ள தடுப்பு மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்பாண்டியன் […]
சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்கீரனூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரும் இணைந்து சேலம் மாவட்டத்தில் தலை வாசல் அருகில் அமைந்திருக்கும் மும்முடியில் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வருகின்றனர். இதில் வெங்கடேஷ் நாள்தோறும் மகேந்திரனுடன் காரில் கடைக்கு சென்றுவிட்டு இரவு […]
சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் எதிரே வந்த லாரி மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.துரிஞ்சிபட்டி இந்திரா காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மதியம் நேரத்தில் கூட்ரோடு பகுதிக்கு சென்றுயுள்ளார். அப்போது திடிரென எதிரே வந்த லாரியானது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே […]
ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி நிலை தடுமாறி எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி லாரி ஓன்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை செல்வகணபதி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி கீழே […]
மோட்டார் சைக்கிளில் சாலையில் வேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசப் பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கும் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் தனது பணிகளை முடித்துவிட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்து […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாறை மீது மோதிய விபத்தில் மேள கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷ்வந்தியம் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய ஜேம்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் சவுரி அப்பன் என்பவரது மகனான அந்தோனி ஆரோக்கிய ஜான்சன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மேளக் கலைஞர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்களான ஆரோக்கிய ஜேம்ஸும், அந்தோணியும் இணைந்து கூனியூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மேளம் […]
மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கலியன்-குப்பு தம்பதியினர். கணவன் மனைவி இருவரும் மொபட்டில் போரூருக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது போகும் வழியில் பனமலைபேட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்று உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே […]
பிரேசிலில் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. பிரேசில் நான்குவழி சாலை சந்திப்பில் பேருந்து மற்றும் காரின் மீது டிரக் மோதி தீப்பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பிரேசிலில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் குறுக்கே பேருந்து திரும்பும்போது அதன் பின்னால் கார் ஒன்று வேகமாக கடக்க முயல்கிறது.அப்போது அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் வேகமாக வந்த எரிபொருள் டிரக் காரில் மோதி இழுத்துச் சென்றது. இதனிடையே பேருந்து எதிரில் வர இழுத்துச் செல்லப்பட்ட கார் […]
சேலம் மாவட்டத்தில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வேன் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து கிரிவாசன் என்பவர் சரக்கு வேனில் தனியார் பார்சல் பொருட்களை ஏற்றி விட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கிரிவாசனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் வேன் நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் ஏறி மேலும் போக்குவரத்து சிக்னல், எச்சரிக்கை பலகை […]
கடைக்கு சென்ற சிறுமியின் மீது பைக் மோதி நிற்காமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கந்தளாய் பேராறு பகுதியில் 12 வயதுடைய சிறுமி கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது கந்தகளாய் பிரதான சாலையை கடக்கும்போது சிறுமியின் மீது வேகமாக வந்த பைக் மோதியது. சிறுமியின் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பைக் மோதியதில் சிறுமி பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]
அமெரிக்காவில் முதியவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவில் வில்லியம் வில்காக்ஸ்(65) என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கா கேஸ் சிட்டி சாலையில் ஏப்ரல் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் செமி ட்ராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் வில்லியம் வில்காக்ஸ் டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் என்றும் சீட் பெல்ட் அணியாதது தான் […]
ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையிலிருந்து டிராவலரில் ஶ்ரீசைலம் ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர […]
கனடாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் இந்த நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த இரண்டு கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு […]
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே 70 வயது முதியவர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் கடந்த 18-ஆம் தேதி அன்று முதியவர் ஒருவர் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு […]
நாட்டில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக […]
சிவகங்கை அருகே எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பரமக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்தார். அபிஷேக் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலை விபத்து ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் கச்சாத்தநல்லூர் கிராமம் அருகே சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]
திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபட்ட வருகின்றது திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள குள்ளனம்பட்டி காவேரி நகரில் வசித்து வருபவர் முருகன். 39 வயதுடைய இவர் நேற்று முன் தினம் காலையில் நொச்சிஓடைப்பட்டி அருகில் உள்ள நத்தம் சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியில் சென்ற வாகனம் ஒன்று முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அங்கு நடந்த விபத்தில் சம்பவ […]
விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார். ந.வ.27-ம் தேதி இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து […]
திருப்பரங்குன்றம் அருகே சாலையில் ஏற்பட்ட விபத்தால் கணவர் மற்றும் குழந்தைகள் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் இருக்கின்ற அனுமார் கோவில் பகுதியில் ராஜ்குமார் மற்றும் கார்த்திகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே சுருளி ராஜன் […]
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. […]
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவனப்பட்டியை சேர்ந்தவர் வீரர் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆண்டிபட்டி கணவக்கேட்டு மாவட்ட எல்லைப் பகுதியில் பணி முடித்துவிட்டு உசிலம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே […]
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவிபாண்டி என்பவர் வெச்சக்கரபட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரவிபாண்டி மீது மோதியது. இதில் ரவிபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் ரவிபாண்டியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் […]
திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கிறான். 12 வகுப்பு படித்து வந்த அவர், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு […]
ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திருவள்ளூர் குறிஞ்சியை சேர்ந்தவர் சரிதா (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து டிரைவராக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் திட்டக்குடி வட்டம் கழுத்துரர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று ஆட்டோவில் அவரது உறவினர்களான புவனேஸ்வரி 40, நவீன் 20 ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகில் […]
திருச்சி அருகே சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். திருச்சி மணிகண்டம் அடுத்த வடக்கு பாகனூரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய இருதயசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் […]
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை அவுரங்காபாத்தில் ஈவ்டீசிங் செய்ததால் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாகர் பகுதியில் வசித்து வந்த சுதிக்ஷா பாட்டி என்ற பெண் உயிரிழந்ததற்கு ஈவ்டீசிங் தான் காரணம் என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தனது தாய் மாமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த சுதிக்ஷா என்ற பெண்ணை பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். பின் தொடர்ந்த இளைஞர்கள் சுதிக்ஷாவை ஈவ்டீசிங் செய்ததால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என சுதிக்ஷாவின் உறவினர்கள் […]
கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் […]