Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு குட் பை சொல்லும் ஜடேஜா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா.  ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனி மீது பல ஆண்டு பகை’…கம்பீருடன் இணைந்து சாதித்த லக்னோ உரிமையாளர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஆர் பி எஸ் ஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இவரின் சொத்து மதிப்பு சுமார் 47,405 கோடி. இவர் தற்போது லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இதற்கு முன்பு  டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் ஐபிஎலில்  உரிமையாளராக இருந்திருக்கிறார். சி.எஸ்.கேக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலங்களில் புனே அணியை வாங்கியிருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :காயத்தால் அவதிப்படும் தீபக் சாஹர் …. கவலையில் CSK அணி ….! தொடரில் பங்கேற்பாரா ….?

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.இதில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ரூபாய் 14 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கவலை அடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிகெதிரான கடைசி டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு வலது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியில் விளையாட ஆசை ….! தினேஷ் கார்த்திக் விருப்பம் ….!!!!

2022  ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி  நடைபெற உள்ளது. 2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி  நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணியிலிருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே […]

Categories
விளையாட்டு

CSK அணியில்…… அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!

நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டி 20 அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின் தெரிவித்துள்ளதாவது: “சிஎஸ்கே ஒரு பள்ளிக்கூடம். அதில் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அது என் வீடு, என்று குறிப்பிட்ட அவர் நான் என் வீட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும், அதை ஏலம் தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜா ….?முன்னாள் வீரர்கள் கருத்து …..!!!

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . 15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : தோனியை தக்கவைத்தது சிஎஸ்கே ….! கழற்றிவிடப்பட்ட ‘சின்ன தல ரெய்னா ‘….!!!

2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ 90 கோடி வரை செலவு செய்யலாம் .அதன்படி 2022 ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி மேல அப்படி என்ன கோபம் கம்பீருக்கு”….? கம்பீர் சொன்ன சிஎஸ்கே வீரர்கள் லிஸ்ட் …..!!!

ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை  தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு நிச்சயதார்த்தம் ….! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் 15 ஒருநாள் 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: CSK அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்தான்…. மாஸ் அறிவிப்பு…..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 14வது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றியது. இதையடுத்து தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் அணியில் தக்க வைக்கப் படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா …..! உற்சாகத்தில் ரசிகர்கள் ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இறுதிப் போட்டியில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் தேதி முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பாராட்டு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 தொடரில் நான்காவது முறையாக  ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் நவ.20-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பாராட்டு தெரிவித்து இருந்த முதல்வர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் எங்கேயும் போகல “…. ‘தல தோனியின் பதிலால்’ ….. ரசிகர்கள் செம ஹாப்பி …..!!!

சிஎஸ்கே  அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது .இதன்மூலம் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது .இதில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னோட இன்னிங்ஸ் முக்கியமானது’ ….! வெற்றி பிறகு தோனி கருத்து ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குவாலிபயர் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 ஆட்டத்தில் டெல்லி – சிஎஸ்கே அணிகள் மோதின .இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 173 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் அதிரடியாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய CSK ….! புள்ளிப்பட்டியல் விவரம் ….!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 11 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.002 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : 11 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க எதிர்பார்கவே இல்ல” …. 2 பேரும் பட்டைய கிளப்பிட்டாங்க …. கேப்டன் தோனி புகழாரம் ….!!!

சிஎஸ்கே  அணி வருகிற 24-ம் தேதி சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில்  ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது .  14 வது சீசன் ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கெத்து காட்டும் சிஎஸ்கே …. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் ….!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி ,6 வெற்றி என  12 புள்ளிகளை பெற்று  முதலிடத்தில் உள்ளது.  2021 சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதன் மூலம் புள்ளி பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பறக்கும் சிக்ஸர்கள் …. ‘தெறிக்கவிடும் தல தோனி ஆட்டம்’ ….. சிஎஸ்கே அணியின் மிரட்டல் வீடியோ ….!!!

பயிற்சி ஆட்டத்தின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சிக்சர்களை அடித்து விளாசும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது . ஐபிஎல் 2021 சீசனில் இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதனால் இப்போட்டியில் தோல்விக்கு பதிலடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே-வின் ‘கடைக்குட்டி சிங்கம்’ …. சாம் கர்ரன் அமீரகம் வந்தடைந்தார் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரரான சாம் கர்ரன் இன்று அமீரகம்  வந்தடைந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில் ஐபில் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரர்கள்  ஜடேஜா ,புஜாரா மற்றும்  மொயீன் அலி  ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தடைந்தனர் .ஆனால் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற     சாம் கர்ரன்  அவர்களுடன் துபாய் வரவில்லை. #KadaikuttySingam is Home 💛#WhistlePodu #Yellove 🦁 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை …. முக்கிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் …. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வீரர் டூ பிளசிஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .இந்நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் முதல் சில போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தென்னாபிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகம் பறக்கவுள்ள சிஎஸ்கே …. வெளியான மாஸ்அப்டேட் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக  சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளனர் . 14-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 -ஆம் தேதி முதல்  தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீ யூ சூன் துபாய்” வைரலான சின்ன தல ட்விட் …! ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’ …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14-வது ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ,ஒரு சில வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக, 13 வது ஐபில் தொடர் ஐக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பவர்-ப்ளே’ பவுடராக என்னை உருவாக்கியது ….. தோனி தான்- தீபக் சாஹர் பேட்டி …!!!

என்னை ‘பவர்-ப்ளே’ பவுடராக உருவாக்கியது தோனி தான் ,என்று இளம் வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார். இந்திய அணியின் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான 28 வயதான தீபக் சாஹர் பேட்டி ஒன்றில் கூறும்போது, கிரிக்கெட் போட்டியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் நனவாகி விட்டது என்று கூறினார்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவை போல் ‘ஸ்வார்ட் செலிப்ரேஷன்’ ….செய்த தல தோனி வைரலான வீடியோ …!!!

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி, ஜடேஜாவை போல் ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணியில்  சிறந்த ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார். அதோடு இந்திய அணியிலும் முன்னணி ஆல்ரவுண்டராகவும் விளங்குகிறார் . இவர் சர்வதேச போட்டி மற்றும் ஐபில் போட்டிகளில் , பேட்டிங்கில் களமிறங்கும் போது அரை சதம் அல்லது சதமடித்து முடித்தால் தனது வெற்றியை கொண்டாடுவதற்கு, பேட்டை வால் போல் சுழற்றுவதை வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’…கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்த சிஎஸ்கே வீரர் …!!!

இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றால் , தினசரி பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு,கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றிருந்த ஒரு சில வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முக்கியமான இடத்தில் கேட்சுகளை தவறி விட்டுடோம் …! தோனி கருத்து …!!!

பவுலர்களுக்கு சவால் விடும் வகையில் , டெல்லி பிட்ச் இருந்ததாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. சென்னை அணி 2  தோல்விகளை  சந்தித்தாலும் , தரவரிசைப் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியின் பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது … சிஎஸ்கே கேப்டன் தோனி …!!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணி தொடக்க வீரர்களான ,ருதுராஜ் – டுபெலிசிஸ் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வெற்றி குறித்து சென்னை அணியின் ,கேப்டன் தோனி கூறும்போது, எங்களுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின்’ நம்பிக்கையை காப்பாற்றிய ‘ருதுராஜ்’ …! ஒரே போட்டியில் அதிரடி காட்டி அசத்தல்…!!!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் சிறப்பாக ஆடினார் . நேற்று நடந்த  போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தால், சிஎஸ்கே பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ்-  டுப்ளசிஸ் களமிறங்கினர். ஆனால் இந்த சீசனில் இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில், ருதுராஜ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சீக்கிரமா உங்கள பார்க்க வரேன்’…! சிஎஸ்கே வீரர் போட்ட ‘ட்விட்’… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்…!!!

சிஎஸ்கே அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர்  பெஹ்ரன்டார்ஃப் வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர் . இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி, இதுவரை நடந்த   2 போட்டிகளில் , ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ,பந்துவீச்சாளர் ஹேசல்வுட்,  இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே பில்டிங், சரியாக அமையாமல் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதற்குப் பதிலாக மாற்று வீரர் சிஎஸ்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பீல்டிங்ல ஜடேஜா மாதிரி’….யாரும் பெஸ்டா பண்ண முடியாது …!! ரசிகர்கள் புகழாரம் …!!!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு  எதிரான  போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . மும்பையில் நேற்று நடைபெற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து,  சுலபமாக வெற்றி பெற்றது.முக்கியமாக நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ,பந்து வீச்சாளர்களின் பங்கு பெரிதாக காணப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில், பந்துவீச்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ஜெயிக்கணும்னா…. ”ப்ளீஸ்” அவரை சேருங்க..! இளம் வீரருக்காக ட்விட் போட்ட பேன்ஸ் …!!

அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் ,சிஎஸ்கே அணியில்  வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷங்கர் ரெட்டி களமிறங்கிவார் ,என்று எதிர்பார்க்கப்படுகிறது . 14 வது  ஐபில் போட்டி தொடரில் , கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த 188 ரன்களை, டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே அசால்டாக வெற்றியை கைப்பற்றியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ,டெல்லி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொயீன் அலிக்காக ஜெர்சியில்…மாற்றம் செய்த …சென்னை சூப்பர் கிங்ஸ் …!!!

இந்த   வருட  ஐபிஎல் தொடர் போட்டியில் , சிஎஸ்கே அணி மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது . இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயீன் அலியை, இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் மொயீன் அலி  இடம்பெற்றுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியின்   வடிவமைப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். அதில் SNJ 10000 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் சிஎஸ்கே அணி… 2 பவுலர்களை இழந்தது …பின்னடைவை சந்திக்குமா சிஎஸ்கே…!!!

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த, தென்ஆப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடி முதல் 2 போட்டிகளில்  விளையாடமாட்டார் என்று  தகவல் வெளியானது. இந்த ஆண்டிற்கான 14வது  ஐபிஎல் போட்டியானது ,வருகின்ற  9 தேதி தொடங்க உள்ளது. இதில்   10ம்  தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலர் ஹாசலிவுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரின் தகுதி என்ன..?” அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே… கிருஷ்ணப்பா கவுதம் பெற்ற புதிய சாதனை…!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரார் இவரா…? வாட்சன் இடத்தை நிரப்புவாரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2020ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2019 டிசம்பரில் ராஜஸ்தான் அணியில் மூன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும்”- சிஎஸ்கே

சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகளும் […]

Categories

Tech |