சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கையின் போது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஏ தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரபலம் காயத்திரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் வாழும் […]
Tag: சிஏஏ
கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் […]
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை […]
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் இந்த […]
சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். […]