அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனியில் சரக்கு விமானம் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. சீன நாட்டின் ஏர்லைன்ஸிற்குரிய போயிங் 747 என்னும் சரக்கு விமானமானது சிகாகோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் அதிகமான பனி குவிந்து கிடந்திருக்கிறது. அதில் சறுக்கிய விமானத்தின் சக்கரம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மோதி விட்டது. இதில் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த […]
Tag: சிகாகோ
அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு, ரயில் சேவைகளை நடத்தி வரும் மெட்ரா என்ற போக்குவரத்து நிறுவனம், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் தண்டவாளங்களில் நெருப்பு வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. இதனால் தண்டவாளங்களில் கிடக்கக்கூடிய பனி உருகி, ரயில் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரின் ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன், மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அதில் சிலர் அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, கதவை அடைத்து கொண்டார்கள். அதன்பின்பு அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, […]
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிகாகோவில் கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை அடுத்த மாதத்திலிருந்து திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் தெர்மாமீட்டர்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. மேலும் கடந்த வருடத்தில் சிகாகோ பள்ளி கல்வித்துறையால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இது […]
கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் தங்கி இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து 36 வயதுடைய ஆதித்யா சிங் எனும் நபர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் ஏஞ்சல்சிக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். வேறு ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு ஆதித்யா விமான நிலையத்திலேயே மூன்று மாதங்களாக மறைந்து […]
இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பலர் காயப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் விழுந்தடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென ஒரு காரில் வந்தவர்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி […]