கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]
Tag: சிகிச்சை
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]
நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் 3,000 செவிலியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பிரிவில் பணியாற்ற சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 48,019த்தை தாண்டியுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னை மாநகரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. […]
உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி காரணத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார் உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒலெனா, “எனது குழந்தைகளுக்கும் கணவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி ஆகிவிட்டது. நான் நலமாக இருப்பதாய் உணர்கிறேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க விலகி இருந்து சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என பதிவு செய்தார் […]
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]
88 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக வார்டுகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனை நடத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,534 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]
கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 47 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் தற்போது 21 […]
பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு […]
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. நிலவேம்பு, கபசுர குடிநீர் 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக […]
தலைமறைவாக இருந்து கிம் என்ன செய்தார் என எங்களுக்கு தெரியும் என தென்கொரியா அதிகாரி கூறியுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 அன்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், யார் கண்ணுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் கோமாவிற்கு சென்றதாகவும், மரணமடைந்து விட்டதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கிம் ஜாங் திடீரென […]
அமெரிக்காவில் புதிதாக கையாண்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் மூவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதோடு அவர்கள் குணம் அடைவதற்கான அறிகுறிகளும் தெரிவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி தயார் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா […]
மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]
ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]
கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்றுசுய ஊரடங்கு நாடு […]
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த 14 நபர்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். இந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லியில் […]
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]
பொதுவாக மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன: பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் மதிய உணவு சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வது இடையூறாக இருக்கும். மேலும் நோயாளிகளை பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது என டியூக் (DUKE ) பல்கலைக்கழக […]
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]