Categories
உலக செய்திகள்

கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளா…? 26-ம் தேதி முதல் நடைமுறை…. சிங்கப்பூர் அரசு அறிவிப்பு….!!

கொரோனா விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை சிங்கப்பூர் அரசு  அறிவித்து உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடுமையான விதிமுறைகளை விதித்து இருந்தது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்து இருக்கிறது. இதனால் அந்நாட்டு அரசு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் சாதித்த பெண்கள்!”.. 100 பேரின் பட்டியல் வெளியீடு..!!

சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் சாதித்த பெண்கள் 100 பேரின் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. 2021 ஆம் வருடத்திற்கான டெக் 3 கருத்தரங்கு இன்று நடந்திருக்கிறது. இதில் பங்கேற்ற தொடர்பு மற்றும் தகவல் அமைச்சரான ஜோசஃபின் தியோ, இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறார். தொழில்நுட்பத்துறையில் நன்றாக பங்காற்றிய சிங்கப்பூர் பெண்களை அங்கீகரிப்பதாக SG100WIT என்னும் திட்டமானது, சிங்கப்பூர் கணினி சங்கம் மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மீடியாகார்ப் நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியான தாம் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் குறைந்த கொரோனா தொற்று.. 9 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் நீக்கம்.. வெளியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் அரசு, பிரிட்டன் உட்பட சுமார் ஒன்பது நாடுகளுக்கு விதித்த விதிமுறைகளை நீக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூர் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த, பிற நாட்டு மக்களுக்கு கடும் விதிமுறைகளை  நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே, வரும் 13 ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் எச்சரிக்கை.. சிங்கப்பூரில் சோதனை பணியில் ரோபோக்கள்..!!

சிங்கப்பூரில் பொது இடங்களில் சோதனை பணியில் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். அதன்படி, தற்போது சிங்கப்பூரில் ஒரு ரோபோ மக்கள் நடமாடக்கூடிய பகுதியில் சோதனை பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரோபோவிற்கு சேவியர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சேவியர் ரோபோ, மக்கள் பொது இடங்களில் சட்டத்தை மீறாமல் இருப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை மீறி செயல்படும் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிற்கு பயணித்த சிங்கப்பூர் கப்பல்.. கொழும்பு துறைமுகத்திற்கு வரக்காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

சிங்கப்பூர் கப்பலான தலாசா பெட்ரஸ், ஐரோப்பாவிற்கு பயணித்த நிலையில் கொழும்பு துறைமுகத்திற்கு அவசரமாக வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலாசா கப்பலானது, சுத்திகரிப்பு பொருட்களை உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்படும்  மூலப்பொருள் கொண்ட கொள்கலனில் கசிவு ஏற்பட்டதால் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. அதாவது இந்த கப்பல், கடந்த மாதம் 25-ஆம் தேதியிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து பயணத்தை  தொடங்கியிருக்கிறது. இன்று காலையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. பழுதடைந்த கொள்கலன் நீக்கி சரி செய்யப்படும். அதன்பின்பு, மீண்டும் துறைமுகத்திலிருந்து கப்பல் வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்… தக்க சமயத்தில் உதவிய ஆப்பிள் வாட்ச்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

சிங்கப்பூரில் சாலை விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த இளைஞருக்கு அவருடைய ஆப்பிள் வாட்ச் தக்க சமயத்தில் உதவிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூரை சேர்ந்த முகம்மது பிட்ரி (24) எனும் இளைஞர் வெறிச்சோடிய சாலை ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மயக்கமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ஐ அவருடைய கையில் அணிந்துள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

போதை தரும் நீராவி…. விமான நிலையத்தில் விற்பனை…. வியப்பூட்டும் தகவல்….!!

நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் பானத்தை சிங்கப்பூர் விமான நிலையத்தில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் நீராவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்வாறு நீராவி பிடிப்பதினால் கொரோனா தொற்றில் இருந்து தடுக்க முடியாது என்று சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் விளக்கமளித்தனர். இருந்தும் கூட மக்கள் வீடுகளில் நீராவி பிடிப்பதை நிறுத்தவில்லை. இது போன்ற சம்பவம் சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

212 கிராம் எடை தான்.. உலகிலேயே மிகச்சிறிய குழந்தை.. தற்போது எப்படி இருக்கிறது..?

உலகிலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படும் குறைமாதக் குழந்தையை ஓராண்டு கழித்து தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சிங்கப்பூரில், கடந்த வருடம் ஜூன் மாதம் Kwek Yu Xuan என்ற பெண் குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. இக்குழந்தையை தாயின் கருவறையிலிருந்து  6 மாதத்திலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 212 கிராம் எடை தான் இருந்துள்ளது. அதாவது, ஒரு ஆப்பிள் பழத்திற்கான எடை தான் […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் மீறி நடக்காதீங்க..! அதிரடியாக ரத்து செய்யப்படும் உரிமம்… சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால குடியேற்ற உரிமை மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை வைத்திருப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

சிங்கப்பூர் கொரோனா கட்டுபாடுகளை மீறி செயல்படுவோருக்கு அந்நாட்டில் தங்குவதற்கான நிரந்தர உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தரமான தங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால […]

Categories
உலக செய்திகள்

சக மாணவன் செய்த கொடூரசெயல்…. 13 வயது சிறுவனுக்கு நடந்த சோகம்….!!

சிங்கப்பூர் பள்ளியில் சக மாணவனை கோடாரியால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் பிரபல பள்ளிகளில் ஒன்றான ரிவர் வேலி மேல்நிலைப் பள்ளி கடந்த திங்கள்கிழமை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனிடையே கழிவறைக்கு சென்ற 13 வயது மாணவன் கோடாரியால் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட அவனது தோழர்கள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆசிரியர் அளித்த தகவலின்படி விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

தப்பி ஓடிய இளைஞர்…. விரட்டி பிடித்த போலீசார்…. 9 மாத சிறைவாசம்…!!

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் இந்திய இளைஞர் ஒருவர் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நாட்டில் பாலச்சந்திரன் பார்த்திபன் என்ற 26  வயது இந்திய இளைஞர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம்  அவருக்கு தொண்டை வறட்சி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையின் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இந்த விதி இல்லை.. சிங்கப்பூர் தான் தீர்மானிக்கும்.. அமைச்சர் பேச்சு..!!

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர், இந்திய மக்களுக்கு தடையின்றி அதிகமாக வேலைவாய்ப்புகள் வழங்கும் எந்த விதிமுறைகளும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், கடந்த 2005 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. இது குறித்த பிரச்சனைகள் சிங்கப்பூரில் அடிக்கடி ஏற்படுகிறது. அதாவது எதிர்க்கட்சிகள், பொருளாதார ஒப்பந்தத்தில், இந்திய மக்களை சிங்கப்பூரில் அதிகமாக நிபந்தனை இல்லாமல் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று இருப்பதாக குற்றம் சாட்டுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம் …. அறிக்கை வெளியாகும் வரை காத்திருங்க …. கோரிக்கை வைத்த மருத்துவர் அமைப்பு …!!!

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று சிங்கப்பூர் மருத்துவர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் 2 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் அரசின் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு  மருத்துவகள்  அமைப்பு  கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து முகநூலில்  மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கையில், அமெரிக்க நாட்டில் கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொண்ட 13 […]

Categories
உலக செய்திகள்

Brand-செருப்புகளை மட்டும் திருடும் பூனை…. வைரல் வீடியோ…..!!!!!

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செருப்புகள் காணாமல் போவது தொடர்கதை ஆகி வந்தது. அதன் பிறகு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு வேலையில் ஈடுபட்டது பூனை என தெரியவந்துள்ளது. அதனைப்போலவே திருடப்பட்ட அனைத்து செருப்புகளும் பிரபல நிறுவனங்களின் செருப்பு என்று கூறப்படுகிறது. தற்போது பூனை செருப்பை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் பூனை, யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு செருப்பை […]

Categories
உலக செய்திகள்

மூச்சுக்காற்றின் மூலம் கொரோனா பரிசோதனை.. ஒரு நிமிடத்தில் சோதனை முடிவுகள்..!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை துல்லியமாகவும், துரிதமாகவும் கணக்கிட உருவாக்கப்பட்ட பிரீத்லைசர் கருவி சிங்கப்பூரில் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் சார்பாக பிரீத்லைசர் என்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றை பயன்படுத்தி கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. துபாய் சுகாதார ஆணையம், இந்த கருவியை பரிசோதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. துபாய் சுகாதார மையத்தின் சார்பாக முகமது பின் ராஷித் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, பல நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

கப்பலில் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் வருகை…. இந்தியாவுக்கு உதவும் பிற நாடுகள் …!!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான கப்பல் புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 30 டன் எடை கொண்ட 18 ஆக்சிஜன் டேங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வருகை…. அதிரடியாக செயல்பட்ட தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி, ஆக்சிஜன் தடையின்றி விநியோகிக்க […]

Categories
உலக செய்திகள்

இதிலிருந்து சீக்கிரமா கண்டுபுடிச்சிரலாம்… கொரோனாவிற்கு மலேரியா மருந்து… ஆய்வில் தெரியவந்த உண்மை…!!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் கொரோனாவிற்கு எதிராக மலேரியா, முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும் உதவியளிக்கிறது என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் கொரோனா குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் povidone-iodine மற்றும் hydroxychloroquine மருந்துகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு மருந்துகளும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் மிக எளிதில் கிடைக்கக் கூடியவை என்பதால் […]

Categories
உலக செய்திகள்

அட என்னப்பா இரும்பனது ஒரு குத்தமா… அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?… என்ன கொடுமை…!!!

சிங்கப்பூரில் போலீஸ் முன்பு ஒருவர் இருமி 14 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன் தோழியை தாக்கியுள்ளார். அதனால் போலீசார் அவரை தன் தோழியை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கப்பூர் தேசிய நூலக வாசிப்பு விழா…. கபிலன் வைரமுத்துவின் நூலுக்கு அங்கீகாரம்…!!

சிங்கப்பூரில் நடந்த தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்துவின் நூல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டு தோறும் வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் வாசிப்பு விழா என்ற ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி வாசிப்பை எளிமையான முறையிலும் புதுமையான முறைகளிலும் வாசிக்க தூண்டும். இது மட்டுமன்றி விளையாட்டுக்கள், புதுமையான இலக்கிய தடங்கள் ஆகியவையும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மிக முக்கியமானது வாசிப்பு விழா. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வாசிப்பதற்காக எழுத்தாளர் கபிலன் […]

Categories
உலக செய்திகள்

தமிழுக்கு ஏற்பட்ட அபாயம்…! ஜெர்மனியில் ஏற்ப்பட்ட அவலம்… களமிறங்க தயாரான தமிழர்கள்…!!

ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு தமிழ்த்துறை கிளாஸ் லுட்விக் ஜானர்ட் என்பவரால் துவங்கப்பட்டதில் தற்போது 12 மாணவர்கள் ,மட்டுமே பயின்று வருகிறார்கள். உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி பிரச்சனையில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகதில் தற்போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் துறையே மூடும் அபாயம் உலக தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடும் நிதி சுமையால் […]

Categories
உலக செய்திகள்

“காதலியை பார்க்க நாடு விட்டு நாடு சென்ற நபர்”… சிறை தண்டனை விதித்த நீதிபதி… காரணம் என்ன தெரியுமா….?

கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறிய காதலர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் 14 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு சிங்கப்பூரில் உள்ளது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று  சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனிலிருந்து Nigel என்ற நபர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh Eyamalai என்ற இந்திய வம்சாவளி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” விதிமுறையை மீறிய காதல் தம்பதி … நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி […]

Categories
உலக செய்திகள்

இரவில் காதலி அறையில் தங்கியது குற்றமா..? சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்… காதலர்களுக்கு நேர்ந்த கதி..!!

பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார்.   சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பெண்ணா..?” தினமும் சித்ரவதை… மகனுக்காக வேலைக்கு வந்த பெண்… 24 கிலோ எடையுடன் உயிரிழந்த சோகம்…!!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தினமும் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன்(40). இவர் கடந்த 2015 ஆம் வருடத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார். அப்பெண் ஏழ்மையினால் தன் 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் திடீரென்று பியாங்நகாய்டான் வீட்டில் இறந்து […]

Categories
உலக செய்திகள்

மனைவியை பார்க்கத்தான் இப்படி செய்தேன்… நீதிமன்றத்தில் நபர் கூறிய காரணம்… நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

சிங்கப்பூரில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் மூன்று முறை தப்பி சென்றதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.  சிங்கப்பூருக்கு செல்லும் மக்கள் நாட்டின் பயணத்திற்கான விதியின்படி தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சுமார் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் சிங்கப்பூரில் Ritz-carlton Millinia என்ற பகுதியில் 52 வயதுடைய பிரிட்டனைச் சேர்ந்த நபர் Nigel Skea என்பவர் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் இருந்து சுமார் மூன்று முறை தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தன் வருங்கால மனைவியை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

மக்களே…” இன்னும் 4,5 வருடங்களுக்கு கட்டாயம் இருக்கும்”… கவனமா இருங்க… அரசு எச்சரிக்கை..!!

இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு கொரோனா என்ற கொடிய நோய் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த கொடிய நோய் 4, 5 வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற நெறிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்ற கொடிய நோயை நாம் உலகை ஆட்டிப் படைத்து வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிங்கப்பூர் செல்கிறாராம் ரஜினி… வெளியான தகவல்..!!

தொடர் மன உளைச்சல் மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ரஜினி சிங்கப்பூர் செல்ல உள்ளாராம். அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் அவர்கள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் தொடங்க இருந்த கட்சியையும் நிறுத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து உடலளவிலும், மனதளவிலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூருக்கு பரவியது… உருமாறிய கொரோனா வைரஸ்… உலக நாடுகள் அச்சம்…!!!

பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வந்தவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா” சிங்கப்பூருக்கும் பரவியதால்…. அதிர்ச்சி…!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா சிங்கப்பூருக்கு பரவியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினாலும் முந்தைய கொரோனா வைரஸை விட இது 70% அதிகம் பரவக்கூடியது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் எதிராளியின் காரணமாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தையின் உடலில்…. “கொரோனா ஆண்டிபாடிகள்” கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ நிகழ்வு…!!

குழந்தைகளின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Celine Ng-chan. கர்ப்பிணியான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று ஆய்வு செய்தபோது தொற்று  இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வீல்சேரில் வந்ததால்… பிச்சைக்காரன் என நினைத்த கடைக்காரர்…. எழுத்தாளரின் நிலைமை…!!

எழுத்தாளர் ஒருவர் கடைக்கு சென்ற பொது அவரை கடைக்காரர் பிச்சைக்காரன் என்று கூறியது  மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிங்கப்பூரில் வசித்து வருபவர் Welsey (40). இவர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் சரியாக பேச முடியாது. எனவே எங்கு சென்றாலும் வீல்சேரில் தான் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் பெரிய வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த கடைக்காரர் welseyயை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

கம்மியான விலை தான்…. நிறைவேறும் ஜன்னல் சீட் கனவு…. குழந்தைகள் குதூகலம் …!!

நாம் அனைவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் பேருந்தாக இருக்கட்டும், ரயிலாக இருக்கட்டும் எதிலும் சென்றாலும் ஜன்னல் அருகே அமர்ந்து செல்வது தனிரகம். அதே போல நம்முடைய எண்ணம் விமானத்தில் நிறைவேறிவிடாதா ? என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை கடந்து வருகின்றோம். பலருக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நிறைவேறாமலேயே இருக்கின்றது. விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்றாலும், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கொடியது அல்ல… சிங்கப்பூர் பிரதமர்…!!!

கொரோனா வைரஸ் மனித குலத்தை அழிக்க கூடிய கொடிய நோய் அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறுகையில், ” நோய் எக்ஸ் மனித குலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அது மட்டுமன்றி இது அதிக அளவிலான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என்று 2018 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக ஏற்றுக்கொண்டது. […]

Categories
தேசிய செய்திகள்

முதல்முறையாக… சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் இந்திய வம்சாவளி வழக்கறிஞர்..!!

வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞரான  பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜூலை 10-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, 83 இடங்களில் வெற்றி அடைந்து, நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்(43) பொதுச் செயலராக இருந்த தொழிலாளர் கட்சி 10 […]

Categories
உலக செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்…. செய்த குற்றத்தினால் மீண்டும் அங்கு செல்ல தடை…!!

ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பின்  பரவலை கட்டுப்படுத்துவதற்காக  சிங்கப்பூர் அரசு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. சிங்கப்பூரில் இதுவரை 45,961 மக்கள் கொரோனாவால்  பாதிப்படைந்த நிலையில் 26 நபர்கள்  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு ,மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பலவிதமான […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு: ஏப்.7ம் தேதியில் இருந்து அமல்… பிரதமர் லீ ஹ்சியன் லூங்

சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோ வைரஸ் எதிரொலி : சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்!

சிங்கப்பூரில் கொரோனா (கொவைட்-19) பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவை தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 […]

Categories

Tech |