பெங்களூரு பல்லாரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது “நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதா-வினர் கூறுகிறார்கள். இப்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டுள்ளது. இதற்காகதான் ராகுல் பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாத யாத்திரையை பா.ஜனதா-வினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா-வை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது நான் பா.ஜனதா-வினரிடம் […]
Tag: சித்தராமையா
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையாவின் சகோதரர் ராமகவுடா. 67 வயதான இவர் மைசூர் மாவட்டம் சித்தராமணஹூண்டி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக பல நாட்களாக அவதிபட்ட வந்த இவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த சித்த ராமையா […]
நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை. அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்த சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகுமாறு ராகுல் காந்தி என்னை வேண்டிக் கொண்டார். ஆனால் நான் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டேன். மேலும் எனக்கு தேசிய அரசியலில் எவ்வித ஆர்வமும் கிடையாது. எனவே மாநில அரசியலில் மட்டுமே நான் ஈடுபாடு காட்டுவேன்” என்று கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி என்று அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், சித்தராமையா உள்ளிட்டோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மிதிவண்டியில் பயணம் செய்தனர். அங்கு பேட்டியளித்த சித்தராமையா, மக்கள் விரோத கொள்கையை பின்பற்றும் பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை என யாராலும் பாஜக அரசை […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ஆறு மாத காலமாக […]
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, தனது தொகுதி பாதாமியில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு பேசியவர், “ஏழை மக்கள் எவரும் உணவு இன்றி பசியால் வாட கூடாது. அவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு […]
கர்நாடக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும் முதலமைச்சர் திரு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திவாலாகி விட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல் அமைச்சருமான திரு சித்தராமையா கொரோனா சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் […]
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டு இருப்பதாவது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளேன். அண்மையில் என்னை […]