மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆளுநர் இரங்கல் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் […]
Tag: சித்திரை திருவிழா
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 7ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் […]
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு ஆயிரம் கன அடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகின்ற 16ஆம் தேதி வரை […]
கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் […]
நடப்பாண்டு மதுரை மாவட்ட சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதையடுத்து 14ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் […]
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சவுமிய நாராயண பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிறப்பு வாய்ந்த சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவிலுக்குள் வாகன புறப்பாடு நடைபெற்றது. […]
திண்டுக்கல் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கடந்த வருடம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 15-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம், ரிஷப ஹோமம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டு அதன் பின் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கொடிமரத்தில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர், ஆனந்தவல்லி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் அந்த கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10.52 மணிக்கு சோமநாதர், ஆனந்தவல்லி திருக்கல்யாணம் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கோவில்களிலும் பங்குனி மாதம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழா பல கோவில்களிலும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்காரங்களும் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வீரஅழகர் கோவிலில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்திற்குள் நடத்த ஏற்பாடு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு அம்மன் யாழி வாகனத்தில் அருள்பாலித்தார். கடந்த பங்குனி மாதம் பல்வேறு இடங்களில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழாவும் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் […]
மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இந்த நிலையில் இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடனும் பல்லாக்கில் சிறப்பு […]
ராணிப்பேட்டையில் கிணற்றிலிருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் சுமார் 500 வருடங்கள் பழமையான கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றை கருவறையாக அமைத்து பாப்பாத்தி கன்னியம்மன் என்கின்ற கிணற்றுக்கன்னி அம்மன் அதிலிருக்கும் நீரில் மூழ்கி உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவிற்காக பாப்பாத்தி கன்னியம்மனை பக்தர்கள் நீரினுள் மூழ்கி அதனைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவது வழக்கம். பின்பு அதே கிணற்றிலிருக்கும் படிக்கட்டில் வைத்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். […]
திருநெல்வேலியிலிருக்கும் சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் சித்திரைத் திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இதனை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இதில் வருடந்தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா தொடங்குவதற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இதனையடுத்து அந்த கொடிமரத்திற்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதற்கிடையே கோவிலின் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேற்கு ரத வீதியில் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்து சிறப்பு பூஜை, கொடிப்படம், தீபாராதனை நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் கொடியேற்றத்தை காண சிறப்பு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சோமநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 நாட்களாக சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் சித்திரை திருவிழா காரணமாக கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு முன்பு நேற்று முன்தினம் சோமநாதர், ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடையுடன் எழுந்தருளினார். […]
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல்லில் சிறப்புவாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ரிஷப ஹோமம் காலை 5 மணி அளவில் […]
தேனியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறவிருந்த சித்திரை திருவிழாவை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்றதாக விளங்கக்கூடிய கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவை விழா கமிட்டி குழு வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மேலும் இத்திருவிழாவிற்கு தேனியிலிருந்து மட்டும் ஆட்கள் வராமல் வெளி மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இதில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் நடைபெறவிருந்தது. […]
மதுரையில் சுபாஷ் சேனா அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருக்கும் தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கோவில் திருவிழா தான் இந்த மாதங்களில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து திருவிழா நடத்துவதற்காக கமிட்டியை நியமிப்பார்கள். பின்னர் அதில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதற்கிடையே தற்போது தமிழகத்தில் கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் […]
மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருந்த காரணத்தினால் எந்த கோயில்களிலும் திருவிழா நடத்தப்படவில்லை. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதால் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. அந்தக் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழா தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 25ம் தேதி தொடங்க வேண்டிய சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த […]