திருமணம் குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சென்ற செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யலட்சுமி நடித்திருந்தார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று வெளியாகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யலட்சுமியிடம் உங்களுக்கு லவ் மேரேஜ் இன்ட்ரெஸ்ட்டா? இல்லை அரேஞ்ச் மேரேஜ் இன்டெரெஸ்ட்டா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த […]
Tag: சினிமா
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார். நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் […]
விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் […]
வெங்கட் பிரபுவின் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக “வாத்தி” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. View this post on Instagram A post shared by SunTV (@suntv) அதன்பின் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் தனுஷ் […]
ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மகேஸ்வரி, மணிகண்டா , நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி. முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலர் குறைந்த வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். அதேபோல் கடந்த வாரம் குறைவான வாக்குகளை […]
கட்டாகுஸ்தி திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் […]
பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் தற்போது 14 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பழங்குடியினருக்கும், ஏலியன்களுக்கும் இடையில் வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் பழங்குடியினரான அசீம், […]
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவரான நடாவ் லாபிட் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இவையெல்லாம் எனக்கு புதிதல்ல. Terror supporters and Genocide deniers can never silence me. Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc — Vivek Ranjan Agnihotri […]
நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கதிரேசன் மேல்முறையீடு செய்திருக்கிறார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தனுஷ் வழக்கில் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதாவது, தனுஷ் தன் மகன் எனக் கூறி மதுரை மேலுரை சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாகவே வழக்காடி வருகிறார் […]
டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. “கட்டா குஸ்தி” படத்தின் 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டிரைக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த படம் “சந்திரமுகி 2” எனும் பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அத்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. […]
டாப்ஸி நடிக்கும் ப்ளர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் டாப்ஸி தற்போது ப்ளர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 2010 ஆம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகி இருக்கின்றது. டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை அஜய் பாஹர் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது […]
தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீங்கிரை. இத்திரைப்படத்தை பிரகாஷ் ராகவா தாஸ் இயக்க ஸ்ரீகாந்த், வெற்றி, சுருதி வெங்கட், நிழல்கள் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரை படத்தை டிடபள்யூடி மீடியா பிரைவேட் லிமிட் தயாரிக்க பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்திருக்கின்றார். இத்திரைபடத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது […]
ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை […]
எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் […]
புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார். சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார். இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.
ரஜினி மற்றும் ரோபோ சங்கர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதை அடுத்து ரோபோ சங்கர் தனது 22 ஆவது திருமண […]
திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் மீனா நடிப்பில் சென்ற 2013 ஆம் வருடம் 5 கோடி செலவில் தயாராகி வெளியான திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படம் தமிழில் பாபநாசம் என கமல் நடிப்பில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் பின்னர் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மூன்றாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி […]
நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார். இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]
தமிழ் திரையுலக இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் தமிழிலும் தடம்பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். விஜய் நடிக்கும் “வாரிசு”, தனுஷ் நடிக்கும் “வாத்தி” போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உருவாகும் “ஆர்சி 15”, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக […]
கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]
எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியருமான கபிலன் வைர முத்துவின் புது நாவலை டிரைக்டர் பாரதி ராஜா சென்னையில் வெளியிட்டுள்ளார். ஆகோள் என பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இன சட்டம் பற்றி ஒரு நவீன அணுகு முறையை முன்வைக்கிறது. இந்த நாவலானது நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக கொண்டு எழுதப்பட்டு உள்ளது. கடந்த 1920ம் வருடம் கைரேகை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியமான பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆகோள் […]
கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அத்திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசியதாவது “சட்டச் செயலாக்கம், நீதி பரிபாலனத்திலுள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய்பீம் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு ஆகும். அத்துடன் விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பிஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கற்பனைக்கு எட்டாத […]
கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார். அதன்பின் […]
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பிக்பாஸில் வெளியேற்ற இரண்டு போற்றியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்யுமாறு சக போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது. தனலட்சுமி, ஜனனி, கதிரவன், மணிகண்டன், நந்தினி, ரச்சிதா, மகாலட்சுமி உள்ளிடோரை நாமினேட் செய்தார்கள். சென்ற சில வாரங்களாகவே […]
சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]
கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். […]
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் சக்தி உருக்கமாக பேசியுள்ளார். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆறாவது சீசனில் ஏழாவது வாரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்காலத்தை தந்தாலும் சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு போட்டியாளராக நுழைந்தார் சக்தி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரத்தான் அந்த […]
ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார். மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது […]
பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். அவர் வெளியேறும் போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் hug கொடுத்தார். அப்போது கடைசியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் விலகிச் சென்றார். இதனால் ரச்சிதாவை […]
ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலாக கன்னட சினிமாவில் தான் திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் […]
அஜித்தின் ரீல் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தன் மூலம் பிரபலமானார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் இவர் தனது 18 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை […]
சென்ற 2018ம் வருடம் வெளியாகிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்படத்தின் டிரைக்டர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கண்ணை நம்பாதே”. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து உள்ளார். அத்துடன் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் “கண்ணை […]
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை டிரைக்டு செய்த மாரிசெல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கக்கூடிய மாமன்னன் படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத்பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்தது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக்வெட்டி கொண்டாடியது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரகுமான் தன் […]
டிரைக்டர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “பாம்பாட்டம்”. இந்த படத்தில் “திருட்டு பயலே”, “நான் அவனில்லை” புகழ் ஜீவன் இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. Excited about this !! Looking forward to working with @BuchiBabuSana & the entire […]
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவற்றில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு போகாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடினார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் […]
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. மும்முரமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது “எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எனவும், தன் வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். […]
கன்னட மொழியில் சென்ற செப்டம்பர் 30ம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து இருந்த படம் “காந்தாரா”. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி.அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்து கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் கன்னட மொழியில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து […]
டிரைக்டர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “வரலாறு முக்கியம்”. இப்படத்தில் நடிகர் ஜீவா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக் குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ் குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சூப்பர்குட் […]
யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வீடியோவானது வெளியாகி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஓவியா, ரோபோசங்கர், தங்கதுரை உட்பட பல பேர் நடித்துள்ள திரைப்படம் பூமர் அங்கிள். அறிமுக டிரைக்டர் சுவதீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க காமெடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்து இருந்தனர். அதன்பின் பூமர் அங்கிள் என […]
உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
இந்தியன் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி […]
ஐஸ்வர்யா தாத்தாவின் ஹாட் பிக்ஸ் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் வரும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது லோ நெட் ஜாக்கெட்டில் பச்சைநிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது. […]
பிரிந்த தனது மனைவியுடன் ஒன்றாக படம் பார்க்க வந்த பாலாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் வீரம் திரைப்படத்திலும் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சென்ற 2016 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக […]