கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரில் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் உலக தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கரோலின் கார்சியா, டாப் 5 வீராங்கனைகளில் ஒருவரான சிமோனா ஹாலெப் ஆகியோர் மோதினர்.இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்சியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Tag: சிமோனா ஹாலெப்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இத்தாலியை சேர்ந்த கமிலா ஜியார்ஜியை […]
இங்கிலாந்தில் நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிமோனா ஹாலெப் விலகினார் . விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார். இந்த காயம் முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் விலகினார். ‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் , இந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 30 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறுகிறது. இந்நிலையில் ருமேனியாவை சேர்ந்த 3வது இடத்தில் உள்ள ,சிமோனா ஹாலெப் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் […]