Categories
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… புதிய போஸ்டர் வெளியாகி வைரல்…!!!

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்தது தணிந்தது காடு” திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். Introducing The Family Man fame @NeerajMadhavv As #Sridharan In @SilambarasanTR_ 's #VendhuThanindhathuKaadu !#SilambarasanTR #VTK@menongautham @arrahman @VelsFilmIntl @IshariKGanesh @rajeevan69 @Ashkum19 @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/xQ8UmXhdC0 — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகாவின் ”மஹா”….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை மாலிக் ஸ்கிரீன்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சிறப்பு வேடத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் நுழைந்த அடுத்த பிரபலம்…. அட இவரா…..? வைரல் புரோமோ….!!!

பிக்பாஸ் 3 போட்டியாளர் சாண்டி மாஸ்டர் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் தற்போது நுழைந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.   இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் நுழையும் விஜய் டிவி பிரபலம்….? வெளியான சூப்பர் தகவல்….!!!

, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் லுக்கில் அசத்தும் நடிகர் சிம்பு….. ட்ரெண்டாகும் கலக்கல் புகைபடங்கள்….!!!

சிம்பு துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிம்பு பிரபல நடிகையுடன் காதலா?”… கூடிய விரைவில் திருமணமாம்… என்னப்பா சொல்றீங்க..!!!

சிம்புவும் பிரபல நடிகையும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. பிரபல நடிகரான சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என டி.ராஜேந்திரரும் அவரின் மனைவியும் கவலையில் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நிதி அகர்வால் இந்த செய்தி பொய்யானது என கூறப்பட்டும் சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து வாழ்வதாகவும் வெந்து தணிந்தது திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாருடா…. சிம்புவிற்கு கூடிய விரைவில் திருமணமா?…. வெளியான தகவல்…!!!

நடிகர் சிம்புவின் திருமண செய்தியானது கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில காரணங்களால் பட வாய்ப்புகள் இல்லாமல் மாநாடு திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் இவருக்கு  வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இவரின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். சிம்பு எங்கு சென்றாலும் திருமணம் எப்போது என்று தான் அனைவரும் கேட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றயடைந்தது. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சம்பளத்தை அதிகமாக கேட்கும் சிம்பு… கோபத்தில் தயாரிப்பாளர்… என்னப்பா இது சிம்பு இப்படி பண்றாரே…!!!

ஐசரி கணேஷ் தயாரிக்கும் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் திரைப்படம் டிராப்பாக உள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். இடையில் சிம்புவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்திற்கு முன்னதாக ஐசரி […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு வழக்கு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்திற்கு சிம்பு பேசப்பட்ட சம்பளம் எட்டு கோடி என்றும் ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மட்டும் அளித்ததாகவும் சிம்பு தரப்பு  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. இதற்கு பதிலடியாக மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு அவர் மீது சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மன்மதன் படத்தில் இவர்தான் நடிக்க இருந்தாராம்…! யாருன்னு தெரியுமா…?

மன்மதன் திரைப்படத்தில் மொட்டை மதன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகின்றார். சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் மன்மதன் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார். இது ரசிகர்களை கவர்ந்து தற்போதுவரை மனதில் இப்படம் நிற்கின்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. சிம்புவின் ”மாநாடு” படைத்த அசத்தல் சாதனை….. வெங்கட் பிரபு உருக்கம்…..!!!

‘மாநாடு’ திரைப்படம் அசத்தலான சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் அசத்தலான சாதனை படைத்துள்ளது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்”….. இந்த வாரம் வெளியேறப்போவது இவரா….? வெளியான தகவல்….!!!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் போட்டியாளர் ராஜு டைட்டிலை வென்றார். இதனையடுத்து, தற்போது ‘பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி’ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு… வெளியான மாஸ் ப்ரோமோ… குஷியில் ரசிகர்கள்….!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசன் சமீபத்தில்  நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கியுள்ளார். திடீரென்று விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியுள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அவர் எபிசோடின் புதிய ப்ரோமோ தற்போது  வெளியாகியுள்ளது.

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

தனுஷ் பட ட்ரெய்லரை சிம்பு வெளியிடுகிறாரா…? என்னப்பா சொல்றீங்க…!!!

நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவின் மாஸ்ஸான என்ட்ரீயில்”…. மாறன் டிரைலர் ரிலீஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ள மாறன் படத்தின் ட்ரைலரை சிம்பு தற்போது தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் மேடையில் வெளியிடவுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தை ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இதில் காளி வெங்கட், சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடிகர்கள் தங்களது திறமையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்கு…. சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் […]

Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்…. “கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்”…. யாருப்பா அது….!!!

விஜய் டிவியின் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை இனி கமலுக்கு பதிலாக பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாக்ஸ் நிகழ்ச்சி 2017ஆம் வருடம் தொடங்கியதிலிருந்தே இவர் தான் தொகுத்து வழங்குகின்றார். இவர் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலும் இல்லை…. வேற ஒன்னும் இல்லை…. முதன்முறையாக மனம் திறக்கும் நிதி அகர்வால்….!!!

நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் பேசப்பட்டதற்கு நடிகை நிதி அகர்வால் முற்று புள்ளி வைத்துள்ளார். தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இதற்குப் பிறகு அவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் ஒரே நேரத்தில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதனால் தான் தனுஷ்-சிம்பு இணையவில்லையாம்”…. வடசென்னை படம் குறித்து வெளியான தகவல்….!!!

வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிம்பு இணைத்து நடித்திருப்பார்களாம். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ்,சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை […]

Categories
சினிமா

தனுஷ் செய்யல…. ஆனா நடிகர் சிம்பு செஞ்சுருக்காரு…. வெளியான லேட்டஸ்ட் தகவல்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு, மன்மதன் படத்தின் தயாரிப்பாளர் குடும்பத்திற்கு உதவி செய்து வரும் செயலால் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் ஒருவர் சிம்பு. கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்புவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்த படம் “மன்மதன்”. இப்படத்தை தயாரித்து சிம்புவிற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் கிருஷ்ணகாந்த். மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “திருடா திருடி” படத்தை தயாரித்தவரும் இவர்தான். இதன்மூலம் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா….? “அப்போ படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் போங்க”…. தலைவர் 169-ல் இணைய உள்ள பிரபல நடிகர்….!!!

தலைவர் 169 படத்தில் நடிகர் சிம்பு  இணைந்து பாடல் ஒன்றை பாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் அவரது மாஸ் குறையாமல் அப்படியே இருக்கிறார். இருப்பினும் அவரின் கடந்த சில படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலக மக்களுக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இந்த வருத்தத்தை போக்க முடிவு செய்த ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இத நாங்க அப்பவே செஞ்சாச்சு”… வெளியான ப்ரோமோ…. கருத்து தெரிவித்த ரசிகர்கள்….!!

பீஸ்ட் படத்தின் ப்ரோமோ தற்போது வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள நிலையில் அதனைச் சிம்பு கடந்த 2010 ஆம் ஆண்டே செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இடையில் கொஞ்சம் சிக்கலில் இருந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோவை படக்குழுவினர்கள் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம்…. “நிதிஅகர்வால் சொன்னது உண்மைதான் போல இருக்கே”…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

நிதி அகர்வால் சொன்னது உண்மையென தற்போது அனைவரும் நம்புகின்றனர். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடத்திவிட வேண்டும் என அவரின் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் சிம்புவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். சிம்புவின் ரசிகர்கள் இந்த வருடம் சிம்புவிற்கு கல்யாணம் ஆகிவிடும் என எண்ணினர். ஆனால் சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமணம் குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாருங்க”…. வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு அவரது பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘உறவு காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. பிறகு குழந்தை நட்சத்திரத்திரமாக கலக்கி வந்த இவர் காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவர் பல துறைகளில் கைதேர்ந்தவர். நடிகர், இயக்குனர், பாடகர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…! நம்ம STR ரோட “வெற்றிக்கு இவர் தான் காரணமா”…? மனம்திறந்த நண்பர்… சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!

சிம்புவின் வெற்றிக்கு பின்னால் அவர் தான் உள்ளார் என்று சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை வெகுவாக குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் மிகவும் ஃபிட்டாக நடித்த சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படிதான் உடல் எடையை குறைத்தார் சிம்பு…. வைரலாகும் வீடியோ பதிவு…. நீங்களும் பாருங்க….!!!

சிம்பு உடல் எடை குறைத்தது பற்றி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் உடல் எடை அதிகரித்து சில வருடங்களாக பல விமர்சனங்களில் சிக்கி வந்தார். மேலும், அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், இவர் உடல் எடையை எவ்வாறு குறைத்தார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளை முன்னிட்டு…. “துபாய் அரசு சிம்புவிற்கு வழங்கி கவுரவம்”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. சிம்பு ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை தந்தாலும் இடையில் அவரின் படவாய்ப்புகள் குறைந்தன. சூப்பர் ஹிட் திரைப்படத்துக்காக காத்திருந்த சிம்பு “மாநாடு” படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் சிம்பு மீண்டும் டாப் ஹீரோக்களில் வந்துள்ளார். தற்போது சிம்புவின் வசம் பல படங்கள் உள்ளன. அவை, கௌதம் மேனன் இயக்குகின்ற “வெந்து தணிந்தது காடு”, கோகுல் இயக்குகின்ற “கொரோனா குமார்”, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! மீண்டும் இணையும் சிம்பு – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி…. எந்த படம் தெரியுமா?….!!!!

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மாநாடு படத்திற்கு பிறகு மீண்டும் வேறொரு படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய “மாநாடு” திரைப்படம் மக்களிடையே நல்ல  நல்லவரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் இப்படம் வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடினர். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்பொழுது மீண்டும் எஸ்.ஜே.சூர்யா-சிம்பு கூட்டணி இணையப் போவதாக சினிமா துறையில் பேசப்படுகிறது. சென்ற 2019ஆம் வருடம் மலையாளத்தில் வெளிவந்த “டிரைவிங் லைசென்ஸ்” திரைப்படம் […]

Categories
சினிமா

“மீண்டும் இணையவிருக்கும் சிம்பு எஸ்ஜே சூர்யா கூட்டணி….” எந்த படத்துல தெரியுமா….?

கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த படம் மாநாடு. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். டைம் லூப் கதையை கருவாக கொண்டு இந்த அமைந்த இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் பலர் வெகுவாக பாராட்டினர். அதோடு இந்த படத்தின் கதை அம்சம் ரசிகர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள கூடியதாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பார் தனுஷ்கோடி என்ற போலீஸ் […]

Categories
சினிமா

“சிம்புவின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க உள்ள பிரபல நடிகை…” யார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சமீபத்திய படமான மாநாடு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து சிம்புவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் வெந்து தணிந்த காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பத்து தல ,கொரோனா குமார் உள்ளிட்ட பல படங்கள் சிம்புவின் கைவசம் உள்ளன.  இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படத்திற்காக சிம்பு செய்த மாஸ் விஷயம்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி அடைந்தது. இதனையடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா

“சிம்புவை மிரட்டிய காரியம் சாதித்த அஜித்!”…. இது எப்போடா நடந்துச்சு…? வைரலாகும் வீடியோ….!!!

கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் சிம்புவுக்கு மாபெரும் திருப்புமுனை என்றே கூறலாம். ஊரடங்கிற்கு மத்தியிலும் 100 கோடி வரை இந்த படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அஜித்தின் மங்காத்தா படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனை செல்போனில் மிரட்டி அஜித் […]

Categories
சினிமா

“சிம்புவின் அதிர்ஷ்டத்திற்கு இது தான் காரணமாம்!”…. இது என்னடா புது புரளியா இருக்கு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் சிம்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. அவ்வளவுதான் சிம்பு இனிமேல் சினிமா பக்கம் தலை வைத்தும் படுக்க முடியாது மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாநாடு படத்தின் மூலம் பழைய மார்க்கெட் மீண்டும் திரும்ப கிடைத்தது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் மூலம் சிம்புவின் மவுசு மீண்டும் அதிகரித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் நீண்ட நாள் ஆசை…. நிறைவேற்றுவாரா சிம்பு…. மாஸ் கூட்டணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியின் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார். இது தனது ஆசை என்றும் அவர் பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். வெற்றிமாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“100 கோடி வசூல் சாதனை”…. எல்லாம் சும்மா…. வெளியான உண்மை நிலவரம்…!!!

மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக் ஆக தான் இருக்கும் என்றும் பலர் தெரிவித்தனர். மேலும் சிம்புவின் படங்களிலேயே இது மிக முக்கியமான படம் என்றும் கூறினர். இந்நிலையில் மாநாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு தவறவிட்ட அந்த படங்கள்?…. இப்போ “செம ஹிட்”…. என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிம்பு தவறவிட்ட படங்கள் தற்போது மெஹா ஹிட்டாக மாறியுள்ளது. ஆனால் ஒருவேளை சிம்பு அந்த படங்களில் நடித்திருந்தால் தற்போது பல வெற்றிகளுக்கு சொந்தக்காரராக மாறி இருப்பார். நடிகர் சிம்பு தவறவிட்ட அந்த படங்கள் பற்றிய தொகுப்பு இதோ :- திமிரு :- தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டில் வெளியான “திமிரு” மெகாஹிட் படத்தில் சிம்புவை தான் ஹீரோவாக நடிக்க முதலில் கேட்டுள்ளனர். ஆனால் அப்போதைய சூழ்நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடைப்பட்ட சிம்புவின் திருமணம்…. இந்த நடிகைதான் காரணமா….? சோகத்தில் டிஆர் குடும்பத்தார்….!!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இரண்டு முறை காதலில் விழுந்த சிம்புவிற்கு இறுதியில் தோல்வி தான் கிடைத்தது. அதனால் திரைத்துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் குரலரசனுக்கு திருமணம் முடிந்து விட்டதால் ஏன் இன்னும் சிம்புவுக்கு திருமணம் செய்யவில்லை என்று அவரது பெற்றோரான ராஜேந்தர் மற்றும் உஷாவிடம் பலர் கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் யார்…? முழு லிஸ்ட் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…?

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை  கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]

Categories
சினிமா

வெந்து தணிந்தது காடு ஷூட் முடிஞ்சாச்சு…. சிம்புவின் அடுத்த பிளான் என்ன…?

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த பின்னர் […]

Categories
சினிமா

மீண்டும் காதலில் விழுந்துள்ளார் சிம்பு….!! ஒன்றாக ஒரே வீட்டில் தங்கியுள்ள ஜோடிகள்….!! யார் தெரியுமா…??

இளம் நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் வீட்டில் அவருடன் ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். 38 வயதான நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இருப்பினும் பல்வேறு நடிகைகளுடன் சிம்பு காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் . ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்…. இத நா எதிர்பார்க்கவே இல்ல…. வெங்கட் பிரபு நெகிழ்ச்சி…..!!!!

ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….. அதிகாரபூர்வ அறிவிப்பு ரிலீஸ்…..!!!

‘மாநாடு’ திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. ”வெந்து தணிந்தது காடு” படத்தில் ‘பிக்பாஸ் 5’ பிரபலம்….. வைரலாகும் புகைப்படம்….!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அசத்தலான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…….. வைரலாகும் சூப்பர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்……!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படத்தின்…… கதாநாயகி யார் தெரியுமா……? வெளியான அறிவிப்பு……!!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”.   மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….. திடீரென சம்பளத்தை உயர்த்திய சிம்பு…… அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்…….!!!!

நடிகர் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்பு திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…… அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரிலீஸ்…….!!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படத்தில் இணையும் முன்னணி நடிகர்…… அட இவரா……. யாருன்னு பாருங்க…….!!!

”கொரோனா குமார்” படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து, சிம்பு ‘பத்து தல’ மற்றும் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” வெற்றி விழாவிற்கு சிம்பு இதனால் தான் வரவில்லையாம்……. நீங்களே பாருங்க…..!!!

‘மாநாடு’ வெற்றி விழாவிற்கு சிம்பு ஏன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   இதனையடுத்து, நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories

Tech |