Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”….. படத்தின் டீசர் குறித்து வெளியான தகவல்…..!!!

‘வெந்து தணிந்தது காடு’ டீசர் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சிம்பு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவருடன் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இதனையடுத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் ‘மாநாடு’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. சிம்புவின் ”மாநாடு”…. வெளியான அதிரடி ட்ரைலர்….!!!

மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸுக்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ப்ரீ ரிலீஸுக்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories
சினிமா

இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்… நடிகர் சிம்பு அறிவிப்பு…!!!

சென்னையில் நடந்த மாநாடு பட புரமோஷனில் பேசிய நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவின் நட்சத்திரம் என்னவென்று தெரிந்து கொண்டு அந்த அம்சம் உள்ள ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் யுவன் எனக்கு நல்ல நண்பனாக சகோதரனாக, அப்பாவாக, எல்லாமுமாக இருக்கிறார். அந்த அளவுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரே அலைவரிசை தான் இருக்கிறது என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”நிறைய பிரச்சனைகள் இருக்கு”….. மேடையில் கண்கலங்கிய சிம்பு….!!!

மாநாடு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கண்கலங்கியபடி  பேசியுள்ளார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் உருவாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு, ”நிறைய பிரச்சனைகள் இருக்கு. பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்கலங்கியபடி  பேசியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்தின் ஷூட்டிங் வீடியோ…. இணையத்தில் ட்ரெண்டிங்….!!!

சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மாநாடு’ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் ”மாநாடு”…. ரிலீசுக்கு முன்பே காத்திருக்கும் சர்ப்ரைஸ்….!!!

‘மாநாடு’ படத்தை ப்ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, சந்திரசேகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகருடன் நடிகர் சிம்பு…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

சிம்பு தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட ரீசன்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் உடல் எடையை குறைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், சிம்பு தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட ரீசன்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின்… “வெந்து தணிந்தது காடு”…. மும்பையில் இறுதிகட்ட படப்பிடிப்பு!!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. சிம்பு, கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தில் 3-வது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்சன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கி தற்போது மும்பையில் நிறைவடைய உள்ளது. இதற்காக சிம்பு, கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழு சமீபத்தில் மும்பை சென்று உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னியாகுமரியில் நடைபெறும் சிம்புவின் புதிய பட ஷூட்டிங்…. ஹீரோயின் வெளியிட்ட பதிவு….!!

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சிலம்பரசன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ”பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.   இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். அதில், ”ஒரு வாரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”மாநாடு”….. படம் வெளியாவதற்கு முன்பே பேனர்கள்…. வெளியான புகைப்படம்….!!

மாநாடு திரைப்படத்தின் பேனர்களின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் நவம்பர் 25ஆம் தேதிக்கு ரிலீஸாக  உள்ளது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் ரெடின் கிங்ஸ்லி…. வெளியான புதிய தகவல்….!!

சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் நடிகர் ரெடிங் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் ரெடிங் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா படத்தில் டோனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர், இவர் ஏ1 படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் ரெடிங் கிங்ஸ்லி நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் டாக்டர் படத்தில் சிறந்த நகைச்சுவையை செய்துள்ளார் ரெடிங் கிங்ஸ்லி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” ட்ரெய்லர் படைத்த புதிய சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

 சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ட்ரைலர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ”மாநாடு” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ள நிலையில், STR இன்  மாநாடு திரைப்படமும் வெளியாகின்றது. சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில்  ”சர்ப்ரைஸ் இருக்கு காத்திருங்கள்” என்று சிம்பு பதிவிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் பாடி உள்ளதாகவும், அது விரைவில் வெளியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. தீபாவளியன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு வெளியாக இருக்கும் நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் காத்திருக்கின்றது. CSK x STR get ready for the surprise 💛Any guesses ???#SilambarasanTR #Atman #CSK pic.twitter.com/KWB2Wniwwe […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா பர்த்டே பார்ட்டி…. தனுஷ் மற்றும் சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்….!!!

யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்புவும்,தனுஷும் பாட்டு பாடி  அசத்தியுள்ளனர். தமிழ் சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆகையால் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் நடிகர்கள் தனுஷ்,சிம்பு, என்ஜாயி எஞ்ஜாமி பிரபலம் தீ, அறிவு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…. ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!!!

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் நேற்று நடிகர் நடிகர் சிம்புவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்ட் தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. இதையடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு பட பாடல் செய்த அசத்தல் சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

நடிகர் சிம்புவின் பாடல் யூடியூபில் செய்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாநாடு திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தற்போது பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை முடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார்…. சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்…. வலைதளங்களில் வெளியான காணொளி….!!

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துள்ள காணொளியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்லட் பைக்கில் கெத்து காட்டும் சிம்பு…. வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு புகைப்படம்…!!!

நடிகர் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு புல்லட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய படம்…. விடாமல் துரத்தும் டைட்டில் பிரச்சனை…. திணறும் படக்குழு….!!!

சிம்புவின் புதிய படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகர் என்றால் அவர் நம் சிம்பு தான். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஐசரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படப்பிடிப்பைத் தடுத்த தயாரிப்பாளர்…. பின்னணியிலிருக்கும் முக்கிய காரணம்….!!

தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகவுள்ள நதியினிலே நீராடும் சூரியன் என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கிருத்தி சனோன் நடிப்பதற்கு ஒப்பந்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு திருச்செந்தூரில் வைத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை… வெளியான முக்கிய தகவல்..!!

மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சிம்பு நடித்துள்ள “மாநாடு” படம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் கவனம் செலுத்த உள்ளார். மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு…. சிம்பு, சந்தானம் இணைந்து நடிக்கும் காமெடி திரைப்படம்…. ரசிகர்கள் ஆவல்….!!!

முன்னணி நடிகர்கள் சிம்பு மற்றும் சந்தானம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்களில் நடிகரர், நடிகைகளின் காமினேஷனை எந்தளவிற்கு ரசிகர்கள் விரும்புகிறார்களோ அதே அளவிற்கு காமெடியர் மற்றும் நடிகரின் கூட்டணியையும் ரசிகர்கள் வெகுவாக விரும்புகின்றனர். அந்த வகையில் சிம்பு மற்றும் சந்தானத்தின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. ஆனால் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து வேறு கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனன் இயக்கும் புதிய படம்…. சிம்பு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவின் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து நடிகர் சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் திரைப்படத்திலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களிலும் நடிக்க தயாராகி வருகிறார். கௌதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் மஸ்ரூம் பன்னீர் சமையல்…. குவியும் லைக்குகள்….!!!

மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் சிம்புவின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.இதேபோல் பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் மில்லியனுக்கும் மில்லியன் நன்றிகள்…. சிம்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து…!!!

முன்னணி நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சிம்பு சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக இருந்தவர். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலிருந்தும் விலகி இருந்தார். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்த சிம்புவிற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மேலும் சிம்புவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்ஜானுக்கு வெளியாக இருந்த ‘மாநாடு’ முதல் பாடல்…. தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு..!!!!

‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜானுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.மேலும் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் அடுத்த கட்டத்திற்கு சென்ற சிம்புவின் ‘மாநாடு’…. வெளியான கலக்கல் தகவல்….!!!

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும்., எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி மாநாடு திரைப்படத்தின் டப்பிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடகத்தில் நடிக்க ஆசைப்படும் சிம்பு…. பிரபல நடிகர் பேட்டி…!!!

முன்னணி நடிகர் சிம்பு நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என்று பிரபல நடிகர் கூறியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் ‘மாநாடு’. அரசியலை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம் ஜி, எஸ்.ஜே. சூர்யா, ஏ.எஸ்.சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகத் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார் சிம்பு….!!!

பிக்பாஸ் பிரபலம் மகத் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். முன்னணி நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திலும், விஜய்யின் ஜில்லா திரைப்படத்திலும் நடித்திருப்பவர் மகத். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவரும் மகத் ‘காதல் Conditions Apply’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இப்படத்தை அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

wow…!! ஜெய்க்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!

ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதை தொடர்ந்து சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு என ஹிட் படங்களை கொடுத்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார். ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ்,எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிவ சிவா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் சிம்புவும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முன்னணி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிந்தது “மாநாடு”…. படக்குழுவிற்கு நன்றி…. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு….!!

“மாநாடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மண் தரையில் படுத்துறங்கும் சிம்பு…. எளிமையான மனிதர் என இயக்குனர் பாராட்டு…. வைரலாகும் புகைப்படம்….!!

மண் தரையில் படுத்துறங்கும் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இவரா…? வெளியான தகவல்…!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசன் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மன்மதன்…. ரீ-ரிலீசாகும் சிம்புவின் ஹிட் மூவி….!!

திரையரங்குகளில் கூட்டங்கள் அதிகரிக்க பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா என்ற தொற்று பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிம்பு…. குவியும் லைக்ஸ்…!!

சிலம்பரசன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிலம்பரசன். இவர் தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் வரும் ரம்ஜானை முன்னிட்டு “மாநாடு” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிம்பு அவர் தன் செல்லப் பிராணியுடன் கொஞ்சும் வீடியோ ஒன்றை காதலர் தினத்தன்று வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமுடன் மோதும் சிம்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல நடிகர்கள் சிம்பு மற்றும் விக்ரமின் படங்கள் ஒரே நாட்களில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சிம்பு தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதேபோல் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “கோப்ரா” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு… போஸ்டரை உருவாக்கி அதிர்வலையை ஏற்படுத்திய ரசிகர்கள்…!!

விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாநாடு” படம் எப்போது? இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கம்…!!

சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடப்படும் என்று கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மாநாடு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி படத்தில் பாடிய சிம்பு…. இன்று வெளியிடப்படும் என்று தகவல்…!!

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் “சுல்தான்” திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி பாடல் பாடுவது இசையமைப்பது ஆகியவற்றிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து முதல் முறையாக பணியாற்றி உள்ளார். அதன்படி கார்த்தி நடிக்கும் “சுல்தான்” திரைப்படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாநாடு” ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்…!!

சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடப்படலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்புவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கெட் பிரபு  இயக்கத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் ஜோடி சேர்ந்து மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளதால் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடலாம் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண பரிகாரம் செய்த சிம்பு… கங்கையில் தீப வழிபாடு… வைரல் புகைப்படம்…!!!

வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் திருமணப் அதிகாரத்திற்காக தீபமேற்றி நடிகர் சிம்பு வழிபட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு படத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளைக்கு மதியம் 2.34-க்கு ரெடியா இருங்க…. அறிவிப்பு…!!

சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு நாளை மதியம் 2.34 மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கதை அரசியலை மைய படுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு எதிராக சதி… டி.ஆர்.ராஜேந்தர் அதிரடி குற்றச்சாட்டு…!!!

நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு முன்பே ஈஸ்வரன் வெளியாகக் கூடாது என்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு நஷ்ட ஈடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS சிம்பு… பொங்கலுக்கு யார் படம்?…!!!

பொங்கலுக்கு திரையரங்குகளில் விஜய் படம் ரிலீசாகுமா அல்லது சிம்பு படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எட்டு நாள் தான் இருக்கு … ‘ஈஸ்வரன்’ பொங்கல் … சிம்பு வெளியிட்ட வீடியோ…!!!

ஈஸ்வரன் படம் வெளியாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன்  இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,நந்திதா ,பாரதிராஜா ,பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு கூறிய கருத்து… ட்விட்டரில் ட்ரெண்டாகும் செம கலாய்…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தை ரசிகர்கள் பாருங்கள் என்று சிம்பு கூறியதை பலரும் டுவிட்டரில் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பேராசைக்கு நாங்க இரையா?… விஜய், சிம்புவுக்கு அதிரடி கேள்வி… வைரலாகும் உருக்கமான கடிதம்…!!!

நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தை பாருங்கள் – STR ரசிகர்களுக்கு அன்பு கட்டளை…!!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து திரைப்படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியானது. ஆனால் மாஸ்டர் திரைப்படக்குழுவினர் தியேட்டரில்தான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பொங்கலை முன்னிட்டு 100 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் சிம்புவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… வெளியானது ‘மாநாடு’ செகண்ட் லுக்… வெளியிட்ட வெங்கட் பிரபு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’ . இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று காலை மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு டுவிட்டரில் வெளியிட்டார். அதில்  சிம்பு இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்க பிரார்த்தனை செய்வது போல் அமைந்திருந்தது. இந்த போஸ்டரை சிம்புவின் […]

Categories

Tech |