Categories
உலக செய்திகள்

சிரியாவில் வெடிகுண்டு விபத்து…. ஈரானின் ராணுவ அதிகாரி உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டின் ஒரு ராணுவ அதிகாரி, சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து  போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிரியாவில் ஏவுகணை தாக்குதல்…. கோபனே நகரை குறி வைத்த துருக்கி…!!!

துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கமாக”…. அமெரிக்க ராணுவத்தின் அதிரடியால்…. நிலைகுலைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு….!!!!

அமெரிக்கா ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் பல பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருகின்றது. இதனை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது ஒரே நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக உயர்ந்த எரிபொருளின் விலை…. பிரபல நாட்டில் பொதுமக்கள் கடும் அவதி….!!!!

எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து…. லெபனான் நாட்டு அகதிகள் 73 பேர் உயிரிழப்பு…!!!

லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் ராக்கெட் தாக்குதல்…. 3 அமெரிக்க துருப்புக்கள் காயம்…. வெளியான தகவல்….!!!!!

சிரியாவில் 2 ராக்கெட் தாக்குதல்களில் 3 அமெரிக்க துருப்புக்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அமெரிக்கா ஹெலிகாப்டர்களின் வாயிலாக பதிலடி கொடுத்ததாக அமெரிக்க மத்திய கமாண்ட்(சென்ட்காம்) ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. வட கிழக்கு சிரியாவிலுள்ள கொனோகோ மற்றும் கிரீன் வில்லேஜ் ஆகிய 2 பகுதிகளிலும் தங்கி இருக்கும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஆதரவு போராளிகள் சந்தேகத்திற்குரிய பல்வேறு ராக்கெட்டுகளை ஏவியதாக சென்ட்காம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 பயங்கரவாதிகளை அமெரிக்கப் படைகள் […]

Categories
உலக செய்திகள்

சந்தையில் நடந்த பயங்கர ராக்கெட் தாக்குதல்…. குழந்தை உட்பட 9 பேர் பலி‌…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராக்கெட் தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தினரின் உதவியோடு சிரிய நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்நிலையில் அல்பாப் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சிரிய ராணுவத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 9 பேர் பலியானதோடு, 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டுடனான உறவை முறித்த சிரியா…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

சிரியா உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிரியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடனான உறவை துண்டிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, எங்கள் நாட்டுடனான உறவை முறிப்பதாக உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் உடனான தூதரக உறவை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிரிய நாட்டில் போர் நடக்கிறது.  அதிபரை எதிர்த்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் களமிறங்கியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வான்வழி தாக்குதல்: சிரியாவில் ஐ.எஸ். தலைவர் இறப்பு…. பிரபல நாடு செய்த செயல்….!!!

சிரியாவின் வடமேற்கேயுள்ள ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியில் அமெரிக்க நாட்டின் ஆளில்லா ஒரு விமானமானது வான் வழி தாக்குதலில் ஈடுபட்ட போது டாப் 5 ஐஎஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகால் கொல்லப்பட்டுள்ளார். இதேபோல் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்ககட்ட ஆய்வு தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் தோல்வி உறுதி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்…. 2 பேர் காயம்…. கண்டனும் தெரிவித்த அரசு…!!!

சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் கடந்த பல ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறையம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களை மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது. இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் அசாத் அரசு இறங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் ராக்கெட் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…. ஒருவர் பலத்த காயம்…!!!

இஸ்ரேல், சிரிய நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சிரிய நாட்டினுடைய தலைநகர் டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேல் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. சிரிய நாட்டைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தங்களை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விட்டது. எனினும் இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இதனால் அதிக பொருட்சேதம் உண்டாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

சிரிய அகதிகளை சொந்த நாட்டிற்கே அனுப்ப நடவடிக்கை…. துருக்கி அதிபர் அறிவிப்பு….!!!

துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. “ராணுவ வீரர்கள் பஸ் மீது தாக்குதல்”….15 பேர் பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!

சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் பலி.  சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி பயங்கரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் அதிகாரிகளும் உள்ளனர். இதற்கிடையில் சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அதிகரித்த தாக்குதல்… ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிரியா….!!!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவிற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவது, உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் சிரிய அதிபர் பஷார்  ஆசாத், இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கலந்துரையாடியுள்ளனர். அப்போது, டான்பாஸ் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு உக்ரைன் நாட்டில், ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை சிரியாவின் அதிபர் ஆதரித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் செயல்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

வானில் நடந்த மோதல்…. இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு…. சிரிய இராணுவம் வெளியிட்ட தகவல்…!!!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை தாக்க முயன்ற போது, வானிலேயே அவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் டமாஸ்கஸ் நகரத்தின் முக்கியமான பகுதிகள் மற்றும் வீடுகளை தாக்க முயன்றுள்ளது. எனவே, சிரிய விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தி வானிலேயே அந்த ஏவுகணைகளை அழித்ததாக சிரியாவின் ராணுவம் கூறியிருக்கிறது. அதே சமயத்தில் சிரியா நாட்டில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணை நுழைந்திருக்கிறது. அதிக சத்தத்துடன் வந்த அந்த […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. வீட்டை சூழ்ந்த அமெரிக்க படை… மனித வெடிகுண்டாக மாறிய ஐஎஸ் தீவிரவாத தலைவர்….!!!

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் உயிரிழந்ததாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, சிரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போது தன் குடியிருப்பைச் சுற்றி அமெரிக்க படைகள் சூழ்ந்து கொண்டதை அறிந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி தன் […]

Categories
உலக செய்திகள்

குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்…. பற்றி எரியும் கிடங்குகள்…. பீதியில் உறைந்த மக்கள்….!!

குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரானது நடைபெற்று வருகின்றது. இந்தப் போரானது அரசுக்கு ஆதரவான குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் துருக்கி படைக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் பயிற்சி மையங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் தங்கும் இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“ஐய்யயோ! சிரியாவில் பயங்கரம்”…. தீவிரவாதிகளிடம் சிக்கிய 850 குழந்தைகள்… அதிர்ச்சி தகவல்…!!!

ஐநாவின் யுனிசெப் அமைப்பு சிரிய நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் சிறையில் சுமார் 850 குழந்தைகள் மாட்டிக் கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறது. சிரிய நாட்டில் சுமார் 3500 நபர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் சிறையை கைப்பற்றுவதில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே கடந்த 6 நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததுடன் 45,000-த்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹசாக்கா நகரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!”…. பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூரம்…. சோகம்….!!!!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாலைவன நகரமான பல்மைராவில் இருந்து ராணுவ வாகனத்தில் சென்றுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை வழியாக வாகனம் சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென ராக்கெட் குண்டை ராணுவ வாகனத்தின் மீது வீசியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“சிரியாவை உலுக்கிய வெடிகுண்டு மழை!”….. கடும் பாதிப்படைந்த நகரம்….!!

சிரிய நாட்டில் இருக்கும் இட்லிப் நகரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சுகோய் விமானங்கள், சிரிய நாட்டிலிருக்கும் இட்லிப் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது. இதில் அந்நகரில் இருக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமானதாக கண்காணிப்பு மையம் கூறியிருக்கின்றது. இந்நிலையில் இப்போது வரை ரஷ்யா  மற்றும் சிரிய நாடுகள் இது தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை. ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

‘தொடரும் தாக்குதல்கள்’…. சேதமடைந்த கண்டெய்னர்கள்…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

துறைமுகத்தின் மீது போர்விமானங்கள் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவின் அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மேலும் சிரியாவின் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் லடாக்கியா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலமாக ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக துறைமுகத்தில் ஆயுதங்கள் இருந்த கண்டெய்னர்கள் நிறைந்த பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி […]

Categories
உலக செய்திகள்

“குறைவான செலவில் மக்கள் வாழ சிறந்த நகரங்கள்!”…. உலக அளவில் முதலிடம் பிடித்த நகரம்….!!

உலகிலேயே மக்கள் வாழ குறைந்த செலவுடைய நகரங்களின் பட்டியல் பிரபல ஆராய்ச்சி அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆராய்ச்சி அமைப்பு, உலகின் நகரங்களை தரவரிசைப்படுத்தி ஒவ்வொரு வருடமும் பட்டியலை வெளியிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது உலகிலேயே குறைவான செலவில் மக்கள் வாழ சிறந்த நகர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் சிரியா நாட்டில் இருக்கும் Damascus என்ற நகர் உலகிலேயே மிகவும் குறைந்த செலவு கொண்ட நகரமாக […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே மிகக்குறைவான பெட்ரோல் விலை!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

உலக நாடுகளிலேயே வெனிசுலா நாட்டில் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மிக குறைவாக 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை சிறிது குறைந்திருந்தது. எனினும், அதன் பின்பு மிக அதிகமாக விலை உயர்ந்து விட்டது. இந்நிலையில், உலக நாடுகளிலேயே மிக குறைந்த விலையாக, வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

‘இது எப்போ முடிவுக்கு வரும்’…. கைப்பற்ற நினைக்கும் பயங்கரவாதிகள்…. காப்பாற்ற முயலும் சிரியா படையினர்….!!

 வான்வெளி தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரானது இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டை சிறிய அரசு படையினர் காப்பற்றுவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

‘திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்’…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!!

காட்டுத்தீ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு  நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.  சிரியாவில் கடந்த ஆண்டு காட்டுத் தீயானது மூன்று மாகாணங்களுக்கு பரவியது. மேலும் 187  காட்டுத்தீ விபத்தில்  280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்தன. குறிப்பாக 32 ,000 ஏக்கர் விவசாய நிலம் தீயில் கருகி நாசமாகியது. இதனை தொடர்ந்து சுமார் 370 வீடுகள் தீக்கிரையாகின. இந்த காட்டுத்தீயினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில் […]

Categories
உலக செய்திகள்

இராணுவ பேருந்தை குறிவைத்து தாக்குதல்…. 14 பேர் பலி…. பதிலடி கொடுத்த அரசு….!!

சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டு போரானது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் சிரியாவின் முக்கிய பகுதியான idlib மாகாணம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் சிரியா அரசுப்படை idlib மாகாணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ரஷியா அரசின் உதவியோடு சிரியா இராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

குண்டுவெடிப்பில் சிக்கிய இராணுவ பேருந்து…. 13 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சிரியாவில் நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் சாலை ஓரத்தில் மறைத்து வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் இன்று காலை பரபரப்பான போக்குவரத்து மிகுந்த பாலம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணைத் தாக்குதல்…. கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி…. பீதியில் உள்ள மக்கள்….!!

ஏவுகணைத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்கில் அஜாஸ்  பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் துருக்கியின் குர்திஷ் பயங்கரவாத அமைப்பினர் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்நாட்டு காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக படுகாயமடைந்த மூவரில் ஒருவரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சிரியாவின் விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களின் சதிச்செயலா….? குண்டுவெடிப்பு தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!

குண்டுவெடிப்பு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்கிலுள்ள துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி அரசு கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் துருக்கி பயங்கரவாத அமைப்பினர் என்று கருதப்படுகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி அரசு படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். அதற்கு கிளர்ச்சியாளர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் துருக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் அலிப்போ மாகாணத்தின் அஃப்ரின் […]

Categories
உலக செய்திகள்

“Little Amal-ன் நடை பயணம்!”.. பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளுக்கான படைப்பு..!!

சிரிய நாட்டின் அகதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் கொண்ட பொம்மை, தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு வந்தடைந்துள்ளது. Little Amal என்ற பொம்மை, பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளின் நிலையை விளக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது, 9 வயதாகும், Little Amal, சிரிய துருக்கி எல்லையிலிருந்து 8000 கிலோ மீட்டர்கள் நடை பயணமாக பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த பொம்மையை அகதி குழந்தையாக கருதி, அதன் பெற்றோரை தேடும் பொருட்டு ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகள் நடந்த போரில்…. இறந்தவர்களின் எண்ணிக்கை…. தகவல் வெளியிட்ட ஐ.நா. சபை….!!

சிரியாவில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3, 50,750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விட  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கலாம் என்று மனித உரிமைகள்  அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று நடத்திய ஆய்வில் சிரியாவில் மொத்தம் 6,06,000 […]

Categories
உலக செய்திகள்

மோசடி வழக்கில் கைதான அதிபரின் சித்தப்பா…. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை…. உறுதி செய்த பாரீஸ் நீதிமன்றம்….!!

சிரியாவின் அதிபரான பஷார் ஆசாத்தின் சித்தப்பாவான Rifaat Assadதிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. சிரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஹபீஸ் ஆசாத்தின் இளைய சகோதரர் Rifaat Assad. இவர் 1984 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் குடிபுகுந்தார். மேலும் Rifaat Assadதின் சகோதரரும், மறைந்த முன்னாள் அதிபருமான ஹபீஸ் ஆசாத் தற்போது இருக்கும் சிரியா அதிபரான பஷார் ஆசாத்தின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

நடந்து வரும் உள்நாட்டுப் போர்…. இந்திய பிரதிநிதியின் உரை…. முடிவுக்கு கொண்டு வந்த ஐ.நா….!!

சிரியா நாட்டில் நடந்துவரும் உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா பாதுகாப்பு சபையில் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களினால்  உள்நாட்டுப் போரானது அரசுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 66 லட்சம் பேர் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாகவும்  67  லட்சம் பேர் தங்களது சொந்த நாட்டிலேயே வீடுகளை இழந்து தவிப்பதகாவும் தெரிய வந்துள்ளது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

சொந்த மக்களை காவு வாங்கும் உள்நாட்டுப் படைகள்…. 6 குழந்தைகள் பலி….!!

சிரியா உள்நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ரஷ்ய அடைக்கலத்தை பெற்ற உள்நாட்டு படைகள் சொந்த மக்களின் மீது பீரங்கி தாக்குதலை நடத்தியது .மேலும் சிரியாவில் பல இடங்களில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே Jabal al-Zawiya  பகுதியில் நடத்திய தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து idlib என்ற கிராமத்தில் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் […]

Categories
உலக செய்திகள்

பல வருஷமா இப்படி தான் நடக்குது..! மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சிரியாவில் எதிர்பாராதாவிதமாக மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நீண்ட காலமாக நடந்து வரும் போரால் குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். மேலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த 10 வருடங்களில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது போன்ற தாக்குதல்களை அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….கழிவறை துவாரத்தில் 2 மீட்டர் மலைப்பாம்பு….வைரலாகும் வீடியோ….!!!

ஆஸ்திரேலியாவில் கழிவறை துவாரத்திலிருந்து  2 மீட்டர் மலைப்பாம்பு   வெளியேற்றப்பட்டது. சிரியாவில் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் வீட்டில் குளியலறையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நின்று வெளியேராமல் இருந்து கொண்டிருந்தது. இதனால் ஏதாவது அடைப்பு இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிட்டார்கள். ஆனால் இதற்கு தீர்வு கிடைக்காததால் பிளம்பரை வரவழைத்து என்ன பிரச்சனை என்று பார்த்துள்ளார்கள் பிளம்பரும்  எந்தவித பிரச்சினையும் இல்லை என்ற கூறியுள்ளார். மேலும் அந்த பிளம்பர் கழிவு நீர் செல்லும் துவாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென […]

Categories
உலக செய்திகள்

“சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா”… அவரது மனைவிக்கும் தொற்று உறுதி… உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்…!!

சிரியா ஜனாதிபதி பஷர் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷார் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் PCR  என்று அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தம்பதியருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிரியா ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து  தகவல்  ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,  ” ஜனாதிபதியும் அவரது மனைவியும் தற்போது நல்ல உடல்நலத்துடன் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு யுத்தத்திற்கு பயந்து… அகதிகளை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பிரபல நாடு..!!

டென்மார்க் நாட்டில் அகதிகளாக இருக்கும் சிரியா மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப டென்மார்க் முடிவு செய்துள்ளது. சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி டென்மார்க்கில் உள்ள 94 சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் டென்மார்க் அவர்களின் வாழிட  உரிமத்தையும் ரத்து செய்துள்ளது .டென்மார்க் சிரிய அகதிகளை அவர்களின் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்க்கு  அனுமதித்ததே தவிர கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பவில்லை. அவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

சிரியா முகாமில் தீ விபத்து…. குழந்தையுடன் 3 பேர் உயிரிழப்பு…. தொடரும் சோகம்….!!

அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில்  சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனுக்குள் வர தடை”… முகத்தை மறைத்து வாழ்ந்த ஷமீமாவின் மற்றொரு முகம்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஷமீமா பேகம் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனக்கு 15 வயது இருக்கும் போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனில் இருந்து சிரியாவிற்கு ஓடினார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஷமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவத்தொடங்கியது. அதனால் பிரிட்டன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையைப் பறித்தது. தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டுமென்று எண்ணிய […]

Categories
உலக செய்திகள்

பைடன் போட்ட அதிரடி உத்தரவு…! அமெரிக்கா பதிலடி தாக்குதல்…. பிரபல நாடு மீது குண்டு மழை …!!

அமெரிக்க போர் விமானங்கள் சிரியாவில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகள் மீது குண்டு வீசி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுபற்றிக் கூறுகையில் , ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் ஜோ பைடனின் உத்தரவினாலே  ராணுவ படைகள் சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதியளித்துள்ளது. தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டதில், […]

Categories
உலக செய்திகள்

பதிலடி கொடுக்கும் ஜோ பைடன்…பிரபல நாட்டின் மீது குண்டு மழை…அதிகரிக்கும் உயிர்பலி…!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் படி சிரியாவில் பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலானது சமீபத்தில் நடந்த ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலானது ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டது.மேலும் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

உணவில்லாமல்… கடந்த ஆறு மாதத்தில் 46 லட்சம் குழந்தைகள் தவிப்பு… எந்த நாட்டில் தெரியுமா?

உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஊழல், அண்டை நாடான லெபனான் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி, மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற பல பிரச்சினைகளால் கடந்த 10 வருடங்களில் மட்டும் நாலு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு நாட்டு மக்களின் மொத்த தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் நாணயம் செயலிழந்து போனதால் உணவு கூட வாங்க முடியாமல் பல குழந்தைகள் தவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களுடன் மோதல்…”18பேர் மரணம்”… 20க்கும் மேற்பட்டோர் காயம் …!!

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. அதே போல் சிரிய நாட்டு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள  இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்று அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லடஹியா […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர்… 28,00,000 குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல்!

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் புற்று நோய் பாதித்த குழந்தைகள்… நேரில் சென்று ஆறுதல் சொன்ன அதிபரின் மனைவி!

சிரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அந்நாட்டு அதிபர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல்-அசாத் (Asma al-Assad) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிரியாவில் உள்நாட்டுப் போர் கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், சண்டையில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்ற அஸ்மா அல் அசாத், அங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
உலக செய்திகள்

34 துருக்கி வீரர்களுக்கும் அனுதாபங்கள்… ஆனால் படைகளை அனுப்ப முடியாது… கைவிரித்த நேட்டோ..!!

ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]

Categories
உலக செய்திகள்

சண்டை போட வேண்டாம்…. ”பேச்சுவார்த்தை நடத்துவோம்” … அதிபர்கள் ஒப்புதல் ….!!

சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]

Categories
உலக செய்திகள்

சிரியா உள்நாட்டு போர்… 33 ராணுவ வீரர்கள் பலி… துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம்!

சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]

Categories

Tech |