ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு உற்சவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும் சங்கரன் பாளையத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Tag: சிறப்பு அலங்காரம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாபா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முதல் முறையாக காலபைரவருக்கு புதிய அலங்காரம் செய்யப்பட்டது. அதாவது காவல்துறையினரர் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு கையில் காவல்துறையினர் வைத்திருக்கும் தடிவைத்துள்ளார். மேலும் மற்றொரு கையில் புகார்களை பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்து கொண்டு புதிய வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த புதிய அலங்காரத்தில் பக்தர்கள் காலபைரவரை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பகுதியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கண்குளிர காட்சி கொடுத்தார். இந்த […]
சிவகங்கை தேவகோட்டை அருகே பங்குனி மாதத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சாமியாடி பெரியகருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும். அதேபோல் இந்த வருடமும் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் வண்ண பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு […]