விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு ஏற்பாடுகளை உதவியாளர் கருணாகரன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் […]
Tag: சிறப்பு வழிபாடு
போச்சம்பள்ளி அருகே சின்னம்மாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி அருகே இருக்கும் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் நேற்று முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயிலிருந்து அதிரசங்களை […]
வேலூரில் கொரோனா அடியோடு போக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வரும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் நடைபெற இருந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக வேலூரில் பழையடவுன் பஜனைகோவிலில் வைத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் […]
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி ஆகிய கோவில்களில் சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், சூரியபகவான், பச்சரிசி, மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன், சாமிக்கு சிறப்பு […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பர நாதர் என்னும் பெயரில் 1008 சிவலிங்கங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது . இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம் . இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிவபெருமானை வழிபட வந்துள்ளார்கள் . இதனால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன . அதோடு மூலவரும் […]