பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டவுடன், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் அரசு வரும் 17ஆம் தேதி அன்று தங்கள் குடிமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புகிறது. எனவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் […]
Tag: சிறப்பு விமானம்
ஆஸ்திரேலியாவில் படித்த இந்தியாவை சேர்ந்த மாணவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கி படித்தார். இந்நிலையில் அவரின் கிட்னி பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக மாணவரை இந்தியாவிற்கு அனுப்பியது. மேலும் சிறப்பு மருத்துவ உபகரணங்களும், அந்த விமானத்தில் இருக்கின்றன. […]
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 834 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். அவ்வகையில் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, கத்தாா், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பினர். நேற்று மாலை நெதர்லாந்தின் […]
ஊரடங்கினால் இந்தியாவில் சிக்கிய நியூசிலாந்து வாழ் இந்தியர் 7 மாத குழந்தையுடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்த சமந்தா தல்லியர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தின் வசித்து வருகிறார். பாரடி கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தந்தையை சந்திப்பதற்காக தனது 7 மாத குழந்தையுடன் சமந்தா தல்லியர் வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் நியூசிலாந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் […]