திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தை ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் நடமாடுகிறது. கடந்த 24-ஆம் தேதி சிறுத்தை சடையாண்டி கோவில் அருகே மானை அடித்து கொன்று இழுத்து சென்றதை சில விவசாயிகள் பார்த்துள்ளனர். இதேபோல் ஆடு, நாய்களையும் சிறுத்தை அடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்து சிறுத்தை […]
Tag: சிறுத்தை நடமாட்டம்
ஊட்டியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா. கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் இருக்கின்ற நிலையில் இங்கு கரடி, காட்டெருமை, கடாமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வன பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடும் பொழுது வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததை பார்த்து சிறுத்தை சாலையோரத்தில் பதுங்கி இருந்தது. அவ்வழியாக […]
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்குப்பாளையம் புதூர் கிராமத்திற்குள் சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து 13 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மயக்க ஊசி பொருத்திய துப்பாக்கியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே காந்தி நகர் பகுதியில் சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்ததையடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையின் படி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை அடித்துக் கொன்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் […]
கரும்பு தோட்டத்திற்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி என்பவரிடமும், தாசில்தாரிடமும் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் அறிவுரையின்படி அதிகாரிகள் மற்றும் […]