நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதியில் தொடர்ந்து கத்தியை காட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தங்கமணி மற்றும் பிரவீன் உள்ளிட்டோரை குற்ற செயல்களில் இருந்து தடுப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினார். அப்பொழுது ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் எனவும் கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் […]
Tag: சிறையில் அடைப்பு
சிறை கைதி ஒருவர் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனங்காடு கோரிக்குளம் பகுதி யை சேர்ந்த கணேசன் என்பவர் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் சென்ற சில நாட்களுக்கு முன்பாக போலீசார் அவரை கைது செய்தார்கள். முன்னதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பித்து ஓடிய நிலையில் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் […]
எஸ்.கே.எம் எண்ணெய் ஆலையில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே […]
இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் […]
ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் சொர்ணவல்லி மற்றும் லட்சுமி என்ற இரண்டு பெண்கள் ஏறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதே பேருந்தில் பயணம் செய்த கோகிலா என்பவரின் பணப்பையை திருடினர். இதை கவனித்துக் கொண்ட கோகிலா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]
அமெரிக்காவில் இளம் கர்ப்பிணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா என்ற நகரில் 19 வயதுடைய இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரின் பின் நின்றுகொண்டிருந்த பேட்ரிக் டெரி என்ற நபர் அந்த பெண்ணின் மீது கை வைத்ததோடு தவறாக நடந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவரோ, “அது என்னுடைய விருப்பம் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். வேண்டுமென்றால் உன்னை […]