கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து மொத்தம் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான் – ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளார் என போலீசார் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.
Tag: சிலிண்டர் வெடிப்பு
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியைச் சுற்றி […]
கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில், சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் வசீர் கஞ்ச் என்ற கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. அதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் திடீரென வெடித்ததற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]
கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான 108 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக கொரோனா நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீ பரவியுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக […]
நியாபக மறதியால் செய்த தவறில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும் பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவவில்லை. இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. […]
வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தம்பதிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அமிட்-பைனல். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் உள்ள சிலிண்டர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பைனல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் […]