கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர். இதனையடுத்து […]
Tag: சிலை கடத்தல்
இந்தியாவின் சிலைகளை திருடி வெளி நாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவற்றில், “இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2008ம் வருடம் கைது செய்யப்பட்டேன். இவ்வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்பே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டுமாக விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. […]
காசியில் திருடப்பட்டு ரேணிகுண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை பறிமுதல் செய்த சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த சிவசங்கரன் திருவாதுரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது […]
புதுச்சேரியில் தனியார் கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 கடத்தல் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் கட்டடத்தில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டது. எழுபத்து நான்கு […]