தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கம் கிடைத்த நிலையில் சிவகளையில் வாழ்விடப் பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைப்பது இதுவே முதல்முறை…
Tag: சிவகளை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூர் வ உ சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வருடத்தில் ஆட்சிய அரும்பணிகளின் தொகுப்பு, ஓவிய வடிவங்களின் கண்காட்சி போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இந்த வருடத்தில் சிவகங்கை […]
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் […]
ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு […]