சிவகிரி அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 200 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. டாக்டர் இசக்கி தலைமை தாங்கிய இந்த விழாவில் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.ஐ.டி.யு.சி வேல்முருகன், […]
Tag: சிவகிரி
நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவகிரியில் உள்ள வேலாயுதசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் புகழ்வாய்ந்த வேலாயுதசாமி கோவில் இருக்கின்றது. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி இக்கோவிலில் காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, வேலாயுதசாமி மணமக்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல சாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்பிறகு காலை 10 மணிக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி […]
சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த எல்லை மாகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான விழா கடந்த 1ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி நிலையில் அந்த நாளில் பக்தர்களுக்கு காப்பு கட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு […]
பெரியார் சிலை அவமதிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை, அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு அலை. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.