சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும் ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் […]
Tag: சிவசேனா
சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். சிவசேனா கட்சி பெயரும், வில்லம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே கோரி இருந்தார். உதயசூரியன், திரிசூலம், தீபச்சுடர் ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரி இருந்தார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னம் […]
சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார். இந்த […]
தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலில் கஷ்டப்பட்டு தலைவராக இருக்க வேண்டும். வேரிலிருந்து அரசியலை பார்த்து, கற்று, ஏழை மக்களிடம் வாழ்ந்து, படிப்படியாக மேலே வந்தவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாக இருக்கட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாக இருக்கட்டும்.யாருமே தங்கத்தட்டில் வந்து அரசியல் கட்சியை நடத்தவில்லை, அதற்கான காலம் தமிழகத்தில் வரும். இப்படி சொன்னதும் கோச்சிப்பார்கள், அது எப்படி வரும் என்று ? சிவசேனா […]
பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாராஷ்டிராவில் இந்த ஆட்சி எப்படி உருவானது, ஆட்சி எப்படி கலைந்தது என்று இரண்டரை ஆண்டுகள் கழித்த பின்பு ஒரு நிமிடம் நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயநலவாதிகளுடைய கூடாரம் மூன்று கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்தார்கள். தமிழகத்திலே காங்கிரசும், திமுகவும் இருப்பது போல பாருங்க எப்படி எல்லாம் அமைந்து வருகிறார்கள் என்று. எந்தவிதமான கொள்கை […]
கோவை பாரதியாா்பல்கலையின் 37-வது பட்டமளிப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது “இந்தியை திணிக்ககூடாது என்றார். இந்தி பயின்றால் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுவதையும் கேள்வி எழுப்பிய அவர், அதை படித்தவர்கள் இங்கு பானி பூரி விற்பதாகவும் கூறி இருந்தார். இவ்வாறு கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திமொழிக்கு சிவசேனா அரசானது திடீரென்று தங்களது ஆதரவை […]
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லகேதே நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 2014ம் வருடம் மராட்டிய சட்டசபைக்கான தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம் அணிந்துகொள்ள திணறும் வீடியோ சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்கை போட்டுக்கொள்ள சிரமப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அந்த முகத்தில் […]
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 145 இருந்த நிலையில் 160 இடங்களை கைப்பற்றிய சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனாவான இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் இரு கட்சிகளும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட சிவசேனா கட்சியானது, முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காத காரணத்தினால் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் கீதே, காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி தான் […]
மாநிலங்கள் தோறும் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நடத்தும் மக்கள் ஆசீர்வாத யாத்திரையானது கொரோனா மூன்றாவது அலைக்கு வரவேற்பு கொடுப்பதாக அமைந்து வருகிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் புதிதாக 39 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது. இதில் பெருந்திரளாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் […]
கொரோனா சம்பந்தமான தடுப்புப் பணிகள் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது சிவசேனா கட்சி. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 4,287 மரணங்கள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று […]
கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பாஜக தோற்றுள்ளது. கொரோனா வென்றுள்ளது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதை சுட்டிக்காட்டிய அந்த பத்திரிக்கை மேற்கு வங்காள மக்கள் ஒரு […]
விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது பா.ஜ.க அரசு. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் […]
நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கொள்ள சிவசேனா காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதைத் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீனாவின் உதவியுடன் சட்டப்பிரிவு 370-தை மீண்டும் அமல்படுத்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி மெகபூபா முக்தி, திரு. பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்தால் மத்திய அரசு […]
இன்று நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி ராமன் அருளால் வைரஸ் எல்லாம் காணாமல் போய்விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க இருக்கிறார். இந்நிலையில்,” ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும்” என சிவசேனா கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இது பற்றி சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ […]
ராமர் கோவில் கட்டுவதற்கு சிவசேனா சார்பாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தும் கொடுக்கவில்லை என கூறுவது வியப்பை ஏற்படுத்துவதாக சிவசேனா மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே மார்ச் மாதம் அயோத்தியில் ஆரத்தி வழிபாடு செய்தார். அச்சமயம் சிவசேனா சார்பாக ராமர் கோவில் கட்டுவதற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். நாளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகின்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் […]
மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை […]
கொரோனா குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை செய்தது தொடர்பாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாராட்டியதில் கொரோனா தொற்று பாதிப்பு சம்பந்தமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பை சிவசேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, “போர் காலம் போன்ற நிலையில் அரசு நிர்வாகத்தில் வழிமுறைகளை வழங்க ஒரு அதிகார மையம் தான் […]
மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் […]