மும்பையில் சிவசேனா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் காவல்துறையினர் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.
Tag: சிவசேனா கட்சி
மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டங்கள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணத்திற்கு கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மாநிலங்கள் அளவில் பின்பற்றப்படும் ஊரடங்கு கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா கட்சியினர் […]
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக உடன்படாததால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனைத்தொடர்ந்து கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ் […]
முகநூலில் அவதூறுகளை பரப்புவோர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பான பேச்சுகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் கண்டுகொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் முகநூலில் வெறுப்பை பரப்பும் வகையிலும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்கள் மட்டும் செயல்படுவர்கள் மீதும் கட்சி பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. மேலும் இது பற்றி அந்த […]