டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதோஹி என்ற நகரை சேர்ந்த இளம்பெண் அகன்ஷா மிஸ்ரா. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யூ.பி.எஸ்.சி என்கின்ற சிவில் சர்வீசுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக கடந்த 2-ஆம் தேதி டெல்லிக்கு வந்து, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜ் நகர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். […]
Tag: சிவில் சர்வீஸ்
அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களில் யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலி பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா நோய்த் தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 […]
கண் பார்வையற்ற பெண் ஒருவர் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மதுரை மணிநகரத்தை சேர்ந்த கே.முருகேசன் என்பவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆவுடைதேவி. முருகேசன் – ஆவுடைதேவி இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, இந்திய அளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்று இருக்கிறார். பூர்ண சுந்தரிக்கு 5 வயதில் ஏற்பட்ட […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோடு 41வது நாள் ஊரடங்கு நடைபெறும் நிலையில், இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதேபோல அரசு தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் […]