உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. 53 வயதுடைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Tag: சீமான்
2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதிலும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளது என்பது குறித்தும் அல்லது தனித்து கட்சிகள் போட்டியிடுமா என்பது குறித்தும் கேள்விகள் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு இவ்வாண்டு மார்ச் மாதம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் கொரோனா நோய்த்தொற்று ஆட்கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்தில், சூன் 30ம் நாள் முடியும் முன் தங்கள் புதிய அறிவிக்கை […]
கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது. தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது […]
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]
ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து […]
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு […]
பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]
நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]