உலக அளவில் நான்கில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனாலும் இதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு டோஸ்க்கு அதன் விலை 4,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது “செல்வோ வேக்” எனும் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த […]
Tag: சீரம் நிறுவனம்
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து […]
சீரம் இன்ஸ்டிடிட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது 9 மாதங்களாக உள்ள பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசிக்கான கால இடைவெளி தான் இதற்கு முக்கிய காரணம். […]
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே பெரும் ஆயுதமாக இருந்தது. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரித்து ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க இந்தியாவுடன் சீரம் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு […]
ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் கோவிட்ஷில்டு தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யப்போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவால்லா கூறியுள்ளார். கோவோவாக்ஸ் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்திய போது நல்ல பலன் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவிற்கு கோவாக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனாகா நிறுவனமும் சேர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்திருந்தது. இத்தடுப்பூசியை, சீரம் நிறுவனமானது உற்பத்தி செய்கிறது. இதேபோன்று முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில், இவ்விரு தடுப்பூசிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க தயாரிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசியை, உற்பத்தி செய்ய அனுமதி பெற்று சீரம் நிறுவனம் உற்பத்தி […]
செப்டம்பர் முதல் கோவோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது/ மூன்றாவதாக கோவாவாக்ஸ் என்ற பெயரில் புதிய தடுப்பூசி இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று திட்டமிட்டுள்ளது. […]
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனத்தலைவர் ஆதர் பூனவாலா, தெரிவித்து உள்ளார். புனேயில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வரும் இந்திய நிறுவனம் சீரம். இந்நிறுவனத்தில் 5 மாடி கட்டிடத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகவும், உயிரிழந்த ஐந்து பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் […]
சீரம் தலைமை நிர்வாக அதிகாரி தடுப்பூசி பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்தன. தற்போது சில தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் […]
ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திங்களன்று சீரம் நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஜனவரி 16 ஆம் தேதி […]
மத்திய அரசு சார்பாக முதற்கட்டமாக சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி கொரோனா தடுப்பு ஊசி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கு அரசுக்காக சிறப்பு விலையாக ஒரு தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா இந்த தடுப்பூசியை அரசுக்கு வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது. முதற்கட்டமாக 16ஆம் தேதி முதல் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் தொடங்கும் போது அங்கே சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவின் கோவிட் சில்டு தடுப்பூசி பயன்படுத்தப்படும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் […]
DGCI அனுமதி கொடுத்தால் மீண்டும் தடுப்பூசி பணிகளை தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. புனேயை சார்ந்த சீரம் நிறுவனம் தயாரித்திருந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவருக்கு போட்டு பரிசோதித்து பார்த்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நான்கு நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தங்களுடைய பரிசோதனையை நிறுத்தியது. ஆனால் […]
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாக்காக தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சில நாடுகளில் தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனிடையே இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து […]