நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒரேமாதிரியான சீருடையை அறிமுகம் செய்யக் கோரி பா.ஜ.க-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. இம்மனுவில் மேற்கொண்டு விசாரிக்க எதுவுமில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tag: சீருடை
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடும் முழுவதும் நடப்பாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று […]
காவலர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை அனைவரும் காக்கி சீருடை இருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படை தகுதிகளும் வேறு என்பது நமக்கு தெரியும். காவல்துறை அலுவலர்களின் உடையில் உள்ள வேறுபாடுகளை பற்றி சிறிது காண்போம். காவல்துறை தலைமை இயக்குனர் தன் சீருடையின் தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ்இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் மற்றும் காலரில் ரிப்பன் போன்றவை இருக்கும். காவல்துறை […]
தமிழக பள்ளி மாணவ, மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு வசதியாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதியை குறிக்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் கயிறு கட்டும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது இதனை தடுக்கும் விதமாக சமூக பாதுகாப்பு துறை […]
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியின்போது மின்சார வாரிய பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் மற்றும் துப்பட்டா உடன் சுடிதார் அணிந்து பணியாற்றலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.மின்சார வாரிய பணியின் போது ஆண் ஊழியர்கள் பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணியலாம். மேலும் பணியின்போது ஊழியர்கள் கேஷுவல் உடைகளை அணியக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அலுவலகத்தில் கண்ணியம் ஒழுக்கம் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அங்கேயே வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. மேலும் […]
மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை போக்குவதற்காக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இரு பாலின மாணவர்களுக்கும், ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பங்காக பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது. மேலும் கேரளாவில் முதல் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், ஆகியவற்றிற்கு பதிலாக பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பை, காலணிகள் ஆகியவற்றை வழங்குவது வழக்கம். இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும் பொருள்களுக்கு பதிலாக பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை […]