தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு […]
Tag: சீல் வைப்பு
உரிமம் இல்லாமல் இயங்கி வந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வீரகனூர் பகுதியில் உரிமம் இல்லாமல் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து வீரகனூர் கிராம நிர்வாக அலுவலர் களியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்கள். […]
அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் […]
வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]
குஜராத் மாநிலத்தில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டியூஷன் சென்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு டியூசன் சென்டரில் கடந்த 7ஆம் தேதி ஒரு மாணவருக்கு […]
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்டு பால் விற்பனை செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட பால் பண்ணைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பிரபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பால் பண்ணையில் வைத்து காய்கறிகளை மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பால் பண்ணைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் […]