கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், […]
Tag: சுகாதாரத்துறை
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகைத்தாய் மையம் என நான்கு வகை மருத்துவமையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த ஐம்பதாயிரம் ரூபாயும் வாடகைத்தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு […]
பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]
வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த பத்து தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களில் 50 சதவிகிதம் சிறுவர்களாக இருப்பதினால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதில் ஒரு […]
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று 98 நாடுகளில் பரவி 45,000 மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 197 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் ஈரான் இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசும்போது குரங்கம்மை பாதிப்பு […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1000 மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 4038 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் குரங்கமை பாதிப்பு இருப்பதால் கேரள- தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு எல்லைகளில் அனைவருக்குமே பரிசோதனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள 16 வகை கேள்விகளுக்கு தமிழக அரசு […]
இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று பாதிப்பு அண்டை நாடான சீனாவிலிருந்து பரவ தொடங்கியது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இறந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதுவரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா நம் வாழ்வோடு ஒன்றியது என்றும் இனி கொரோனாவுடன் வாழ பழகிகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் […]
பிரிட்டன் நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் குரங்கு அம்மை நோயில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தங்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது, குரங்கம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குரங்கு அம்மை நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. இந்த நோய் ஓரின சேர்க்கையாளர்களில் ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. தற்போதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் தான் 96% பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் 37 வயது கொண்ட […]
கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்ற ஒருவகையான வைரஸ் காய்ச்சல் 85 குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்குகிறது. இதன் காரணமாக சருமத்தில் சிவப்பு சிவப்பாக திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் அதிக பாதிப்புகள் இருப்பதால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் […]
ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியீட்டுக்குள்ள சுற்றறிக்கையில், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில்இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழ்நாட்டில் கொரோனா விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியது தான். மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 73 சதவீதத்தினர் இரண்டாவது தவணை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணியை 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர் ஏற்கனவே அதே துறையில் அவரது சகோதரர் பணியாற்றுவதை மறைத்து விட்டதாக கூறி 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி […]
கொரோனா குறைய தொடங்கியதன் காரணமாக வழக்கமான செயல்களை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று 3-வது அலை இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 74 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 39 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் […]
தமிழகத்தில் கொரோனா 3வது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் உச்ச நிலை மற்றும் வீழ்ச்சி நிலை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் அலையில் 2020 மே 31 ஆம் தேதிக்குப் பின் தினசரி 1000 நபர்களுக்கு தொற்று உறுதியானதாகவும், 2020 ஜூலை 27 ஆம் தேதி 6,993 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானதாகவும் கூறியுள்ளது. அதே […]
குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட […]
தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதாரத்துறை மக்களுக்கு ஒமிக்ரான் வைரசின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரானின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் :- * ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்மை அறிகுறியாக 73 சதவீதம் பேருக்கு ‘மூக்கு ஒழுகுதல்’ காணப்பட்டுள்ளது. அதேபோல் 68 சதவீதம் பேருக்கு தலைவலியும், 30 சதவீதம் பேருக்கு குளிரும், 29 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 6,039 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் 20 நாட்களில் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை காய்ச்சலை பரப்பக்கூடிய ADS வகை கொசுக்கள் மழைக் காலங்களில் அதிகம் பெருக்கமடைகிறது. அந்த கொசுக்கள் மூலமாக 2019ல் தமிழகத்தில் 8,527 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் 2020ல் பாதிப்பு 75 % குறைந்து, 2,410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் […]
திருப்பூர் மாவட்ட சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: social worker, lab technician விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 24 இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். அறிகுறி இல்லை என்றால் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பராமரிப்பு மையங்கள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கொரோனா பாதிப்பு விவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 17,934 பேர் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. இன்று […]
ஹைதராபாத் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவது சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றன என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் மூலமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது சுகாதார துறையை கவலையடையச் செய்துள்ளது. மேலும் இந்த குழந்தைகள் லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு கொரோனா […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் […]
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. 325 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று புதிதாக 1,594 […]
மும்பையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளுடன் ஒமைக்ரான், ப்ளூமைக்ரான் போன்ற கொரோனா செய்திகளும், பொதுமக்கள் 3-வது அலை தொடர்பான செய்திகளும், மக்களை பீதியில் வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் ஒமைக்ரான் 3-வது அலை எழுந்தால், கட்டாயம் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது. அந்த வரிசையில் 3-வது அலையின் போது 80 லட்சம் கொரோனா பாதிப்புகளும், 80,000 பலிகளும் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை […]
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டியதில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தான் பிறகு குறையும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாநகராட்சி சார்பாக தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கபட்டு வருகிறது. எனவே […]
தமிழகத்தில் இதுவரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. அதன்மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 16-வது முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. மேலும் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்தநிலையில், இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் […]
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 16 தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. அதேபோல […]
தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கியதுமே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா உறுதிசெய்யப்பட்டால் ஒமிக்ரான் பாதிப்பா என்று கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி இந்த வைரஸ் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் 2 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் இந்த வைரஸ் தற்போது நாட்டின் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் […]
இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்றும் இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும் நோயின் தீவிரம் குறைவாவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது […]
மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரிட்டனில் 30 வயதுக்கு மேலான அனைவருக்கும் மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். அதாவது, தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட மற்றும் வேகமாக பரவும் தன்மை உடைய ஒமைக்ரான் தொற்றின் காரணமாக இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் 30 முதல் 39 வயது வரையில் உள்ள 75,00,000 பேர் மூன்றாவது தவணை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலத் திட்டக் […]
கொரோனா தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மருத்துவ சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை.அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார துறை உத்தரவு. பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு. pic.twitter.com/x93IvTXsN3 […]
தமிழ்நாட்டில் தற்போது வரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரான் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மரபியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அது ஒமைக்ரான் பாதிப்பு. மேலும் இன்று நடந்த 13வது தடுப்பூசி முகாமில் இதுவரை 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனா எதிர்த்து போராடக்கூடிய மிகப்பெரிய […]
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை […]
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நவம்பர் 19ஆம் தேதி மலேசியா திரும்பிய சிங்கப்பூரில் கல்வி பயிலும் இளம் மாணவிக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூரில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மலேசியாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மலேசிய நாட்டின் சுகாதாரத்துறை […]
யூனிசெஃப், 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, HIV பாதிப்பை தடுப்பதற்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, முதியவர்கள், பெண்கள் என்று பலர் எச்ஐவியால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃப் தெரிவித்திருக்கிறது. எச்ஐவி நோய் 50 வருடங்களாக நாட்டின் […]
தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள், தடுப்பூசி மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீப நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஆஸ்திரிய நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாற்றமடைந்த கொரோனா தொற்றை கண்டறிந்திருக்கிறார்கள். […]
ஸ்பெயினின் சுகாதாரத்துறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை குறைந்திருப்பதாக கூறியிருக்கிறது. ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி கரோலினா டரியாஸ் கூறியிருக்கிறார். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்களுக்கு அதிகம் கொரோனா தொற்று பரவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சுமார் 546 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தற்போது வரை 2 டோஸ் தடுப்பூசிகள், 79% பேர் எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களிடையே தொற்று பாதிப்பு […]
நாடு முழுவதும் கொரோனவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “பிரதமர் தொடங்கி வைத்த ஹர்கர் தஸ்தக் என்ற தீவிர தடுப்பூசி பரப்புரை வரும் 30 -ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறும். விடுபட்டவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 9 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் முதியோர்கள் உயிரிழப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அடுத்த மாதத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை தொற்றை கட்டுப்படுத்த தேவையானதாக இல்லை. எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் பூஸ்டர் […]
அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவுக்கு எதிரான கூடுதல் தவணை தடுப்பூசியை சுமார் 2.4 கோடி பேருக்கும் அதிகமானோர் செலுத்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 43 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக […]
தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்குவதால் பருவகால நோய்களான டெங்கு போன்ற நோய்கள் அதிக பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும். இதற்கு கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, சாதாரண ரத்தப் […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. அப்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் காரணமாக […]
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 1000 இடங்களில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் […]