மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tag: சுகாதாரத் துறை
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பின்னர் குணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் புதிதாக டெல்டா ப்ளஸ் தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா […]
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]