அமெரிக்காவில் சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மடுத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக கொரோனா பாதித்த சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை அரசு குறைத்துள்ளது. இதுவரையிலும் கொரோனா தொற்றுக்கு ஆளான சுகாதார உழியர்கள் 10 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. […]
Tag: சுகாதார ஊழியர்கள்
உலகம் முழுவதிலும் கொரோனா நோயாளிகளுக்கு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு துணிச்சலுடன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்டவை எதுவும் சரிவர கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையும், அவர்களில் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகியுள்ளது. சர்வதேச அமைப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை […]
உலகம் முழுவதிலும் 22000 மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் சுமார் 52 நாடுகளில் மொத்தம் 22073 […]