பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவன கழிவுகள் மூட்டை மூட்டையாக பொது இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அடிக்கடி கழிவுகளுக்கு தீ வைத்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் […]
Tag: சுகாதார சீர்கேடு.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள், மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடைகளில் சேரும் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டி விடுகின்றனர். நீர்நிலைகள், காலியிடங்கள் சாலையோரங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் பயப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. […]
சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அரிட்டாபட்டி கிராம ஊராட்சி. இயற்கை வளங்களும் பழமை வாய்ந்த புராதன கல்வெட்டுகளும் குடவரைக் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் விளைநிலங்களை ஓட்டினர் போல் நூலகமும், சுகாதார மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சுற்றிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் மழைநீர் தேங்கி கிராம மக்கள் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய அங்கன்வாடி மையம் […]