செக் குடியரசில் சிறுவர்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் பயத்தை போக்குவதற்காக சுகாதார ஊழியர்கள் கார்ட்டூன் வேடமணிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். தற்போது சில நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சிறுவர்கள் தடுப்பூசியால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால், தடுப்பூசி மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்கும் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் இத்திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி கார்ட்டூன் வேடங்களான, மிக்கி மவுஸ், பிகாச்சூ போன்ற […]
Tag: சுகாதார பணியாளர்கள்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். அப்போது சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாண்டனர். அதனால் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு உதவியை அறிவித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி கொரோனா நோய் தொற்று பாதிப்பைத் தடுக்க […]
தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கவனிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2,100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
பிரிட்டன் அரசு சுகாதார பணியாளர்களுக்கு குறைந்த சம்பள உயர்வை வழங்கியதால் தொழிற்சங்க நிறுவனங்கள் அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். பிரிட்டன் அரசு தங்களின் NHS பணியாளர்களுக்கு சம்பள உயர்வை 1% அளிப்பதாக அறிவித்தது. எனவே குறைந்த ஊதிய உயர்வை அளிப்பதாக சுகாதார பணியாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்ததி வருகின்றனர். இதனால் ஒரு சதவீத சம்பள உயர்விற்கான முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு […]
வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை […]
கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]