நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாஸ்டேக் மூலம் இணைய வழியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின் ஒரு வாகனம் சுங்க சாவடியை கடக்க சராசரியாக 47 வினாடிகள் மட்டுமே ஆகின்றது. இதற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்துள்ள நிலையில் தற்போது 260 வாகனங்கள் ஒரு மணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றது. அந்த அளவிற்கு […]
Tag: சுங்கச்சாவடி
இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடி கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி வாகன பதிவு எண் அங்கீகார முறையில் தாமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் […]
சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்ட டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை மறித்து சுங்கச்சாவடி அலுவலர் கட்டணம் கேட்டபோது திடீரென லாரி சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சென்றது. இந்த டிராக்டரை தொடர்ந்து 13 டிராக்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சென்றது. […]
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக […]
நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய சுங்கச்சாவடியில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறைதான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. எத்தனை முறை சுங்கச்சாவடியைக் கடந்து செல்கிறதோ அதற்கு ஏற்றார் போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சுங்கக் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. அதே போல இந்தாண்டும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளிவட்ட சாலையில் இயங்கி வரும் நான்கு சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்ன முல்லை வாயல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள சுங்க சாவடி வழியாக செல்லும் […]
சுங்கக்கட்டணம் அதிகரிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுதும் 400க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானகரம் சுங்கச்சாவடி உள்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகன வகைகளை பொறுத்து ரூபாய் 5 முதல் ரூபாய் 80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை […]
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்.1) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வருவதற்காக ரூ.90-லிருந்து ரூ.100-ஆகவும், ஒருமுறை சென்று வரக்கூடிய ஜீப், வேன், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ. 70-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் […]
தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூடுதலான சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது வரவேற்கப்பட வேண்டியதாகும். கேரள மாநிலத்தில் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என்ற விதியின் அடிப்படையில் […]
ஆம்னி கார் மீது லாரி மோதி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் க.க சாவடி அருகே கேரளாவிலிருந்து ஆம்னி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்னி காரில் […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்லும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுங்கவாடியில் கட்டணம் செலுத்துவதில் காலதாமதத்தை தவிர்க்க கூடிய வகையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்ட மின்னணு அட்டை மூலம் சுங்கசாவடியை கடந்து செல்லும் வாகனம் தானாகவே இணையம் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து நேற்று […]
மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு விமானம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், திடீரென்று சரக்கு விமானத்தின் பிரேக்குகள் இயங்காமல், அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதியிருக்கிறது. இக்கொடூர விபத்தில் சுங்கச்சாவடி அருகே நின்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து, மூவருக்கு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் இருந்து 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக இன்னும் 3 நெடுஞ்சாலைகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது 6 சுங்கச்சாவடிகளை அமைக்கப் போவதாக கூறி வந்த தகவல் மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரிக்கைகள் வலுப்பெற்று […]
சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறு சிறு கிராமம் வரை 20 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎம்ஆர் சாலையிலுள்ள பெருங்குடி, நாவலூர், துறைபகம், மேடவாக்கம், அக்கறை ஆகிய இடங்களில் சுங்கச் […]
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுங்கச் சாவடிகள் தொழில் கூடமாக மாறியிருக்கிறது. படிப்படியாக சுங்கச்சாவடிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் குறைவாக இருந்தால் மக்களே விரும்பி தாங்களாக முன்வந்து கட்டணத்தை செலுத்துவார்கள். ஆனால் கட்ட முடியாத அளவிற்கு சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று ஒவ்வொருவிதமாக கட்டணம் வாடகையாக […]
சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகிறார். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போல தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் […]
திருநெல்வேலியில் லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலிருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சுங்கச்சாவடியிலிருக்கும் நாகர்கோவில் கவுண்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த லாரி மாரியப்பன் மீது பலமாக மோதியதோடு மட்டுமல்லாமல் நிற்காமலும் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக […]
தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளில் ஒரு வருடத்தில் நீக்கப்படும் என புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8 தேதி தொடங்கியது.அதில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. குன் வார் டேனிஷ் அலி ஒரு கேள்வி எழுப்பினர். அவர் கட்முக்தேஸ்வர் அருகே நகராட்சி எல்லையில் ஒரு சுங்க சாவடி அமைத்து இருப்பது பற்றி கேள்வி கேட்டார். அதற்கு […]
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளினால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய பிரச்சினைகள் தீரும் வகையில் பாஸ் டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். சுங்க சாவடிகள் […]
சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் முக்கியமான சுங்க சாவடி ஆக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் 12 மணிமுதல் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அனைத்து தளங்களிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர். பணம் கட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான […]
இன்று முதல் ஃபாஸ்டேக் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது ஃபாஸ்டேக் படுத்தப்படாத கார் மற்றும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் நுழையும் போது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டணங்களில் உள்ள அனைத்து பாதைகளும் இப்போது பிப்ரவரி 15 நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு வாகனமும் படுத்தப்படாமல் அல்லது […]
சுங்கச்சாவடி பகுதியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவு மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி பகுதியில் பழுதடைந்த சாலைகள் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரவாயல் வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட மாநில அரசுத்துறைகளில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், விருப்பப்படும் அதிகாரிகளை எதிர் மனுதாரராக […]
நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் பூஜ்ஜிய பரிவர்த்தனை […]
ஓசூர் ஆர்டிஓ வாகன சுங்கச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக கர்நாடக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் […]
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் […]
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுவாக தளர்வு ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டு.. இன்று முதல் நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. மாநிலங்களும் இதே நடைமுறையை பின்பற்றி தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் […]
நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் அடி எடுத்து வைக்கும் பொதுமக்களுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டம் நாளை முதல் அமலாக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 […]
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு […]
கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும். திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், […]
இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே சென்னையில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி […]