சுனாமி காலகட்டத்திற்கு பின் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும் சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பயமடைந்துள்ளனர் […]
Tag: சுனாமி
ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார். அவரின் கணவர் சுனாமியில் உயிர் […]
ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 […]
‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் (41) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘பிரபாகரன்’ படத்தில், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்தது. மேலும், ‘இனி அவன்’ படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லே நகரில் இருந்து 65 கிமீ தொலைவில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. இதனால், வீடு, அலுவலகங்கள், முக்கிய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பெரிய அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது வலையை வீசி மீனுக்காக காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமான மீன் ஒன்று வலையில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Now that’s the real #CatchOfTheMatch. 16 ft long magnificent #Oarfish was caught by fishermen off the coast of Chile. #FridayFacts pic.twitter.com/NfYE2onxjY — KunalSarangi (@KunalSarangi) July 15, […]
வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்று ஒரே நாளில் 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் நிலநடுக்கம் 11.5 மணிக்கு 4.4 ஆக ரிட்டர் அளவில் பதிவானது. 2 வது நிலநடுக்கம் பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் பதிவானது. அதனை தொடர்ந்து 3 வது நிலநடுக்கம் 2.6 மணிக்கு 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து 2.37, 3.02 மணிக்கு 4.7, 4.4 பதிவாகியது. இதனைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு […]
இந்தோனேசிய அருகில் கிழக்கு திமோர் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோர் கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் காலை 9 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.1 என பதிவாகியுள்ள நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மற்றும் இலங்கை கடற் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]
இன்டர்நெட் வசதி இல்லாத தீவிற்கு எலன் மஸ்க் மீண்டும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு டோங்கோ. சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ எனும் எரிமலை கடலுக்கடியில் இருக்கிறது. இந்த எரிமலை கடந்த ஜனவரி 15ம் தேதியன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு தோன்றியது. இதில் […]
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பறிகொடுத்தனர்.அப்போது நாகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் அன்னை சத்யா இல்லத்தில் வளர்க்கப்பட்டன. அதில் ஒன்பது மாத குழந்தையாக இருந்த சவுமியா மற்றும் மூன்று மாத குழந்தையாக இருந்தே மீனா ஆகிய இருவரையும் அப்போதைய நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்துள்ளார். பின்னர் இதில் சௌமியாவுக்கு 18 வயது ஆனபிறகு […]
இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]
டோங்கோ நாட்டில் உருவான சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. டோங்கோ என்ற பசிபிக் தீவு நாட்டில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தீவுகள் இருக்கிறது. அதில் தீவுகள் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றது. இதில், கடலுக்கு அடியிலும் சில எரிமலைகள் இருக்கிறது. இதனிடையே அந்நாட்டில் கடலின் அடியில் இருந்த ஒரு எரிமலை கடந்த மாதம் 15ம் தேதியன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, அதன் தாக்குதலில் டோங்கோ தீவானது […]
சுனாமியால் பாதிப்படைந்த டோங்கா தீவிற்கு மத்திய அரசு, 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் பெருங்கடல் நாட்டில், கடந்த சனிக்கிழமை அன்று கடலின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, எரிமலை பிழம்பு, சாம்பல் மற்றும் நெருப்பு கடலிலிருந்து வெளியேறியது. இதனால், டோங்காவில் சுனாமி அலை உருவானது. எனவே, டோங்கா தீவிற்கு அருகேயுள்ள நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை, டோங்கோ தீவின் நிலை […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டில் பல தீவுகள் உள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் சில எரிமலைகளும் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள “ஹுங்கா டோங்கோ” என்ற எரிமலையானது கடலுக்கு அடியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் கடலில் உருவானது. மேலும் அந்நாட்டின் […]
டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுனாமி உருவானது. 21-ஆம் நூற்றாண்டிலேயே பயங்கர இயற்கை சீற்றமாக இந்த எரிமலை வெடிப்பு கருதப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பு கடந்த […]
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கடியிலுள்ள எரிமலை ஒன்று கடந்த சனிக்கிழமையன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சுனாமி டோங்கா தீவை பெருமளவு தாக்கியுள்ளது. ஆகையினால் டோங்கா தீவில் இணையத்தள சேவைகள் உட்பட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகளை கண்காணிப்பதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் […]
பாகிஸ்தான் நாடு அதிக நிலநடுக்க பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் வருடம் வரை 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று சுனாமி, புயல்கள் மற்றும் பலத்த மழை ஆகிய பாதிப்புகளும் ஏற்படகூடிய நாடாக இருக்கிறது. கடந்த 1945-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடலோரம் மற்றும் ஈரான், இந்தியா மற்றும் ஓமன் நாடுகளை சுனாமி தாக்கியதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் ஐ.நா. வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து […]
சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஓவியம் வரைந்து வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக 6,857 சதுர அடி பரப்பளவில் ஓவியம் ஒன்றை வரைந்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு கார்த்திக் ராஜாவின் கின்னஸ் சாதனை முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இடிந்தகரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தகரை கடற்கரை பகுதியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய காவல்துறை சார்பாக இறைவனை வேண்டுவதாக கோரினார்.
நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுலவேசி மாகாணத்தில் […]
இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், […]
பசிபிக் பெருங்கடல் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வாணாட்டு தீவுக்கு அருகே கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. போர்ட் விலாவில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில், கடலில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட பூகம்பம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. முதலில் எச்சரிக்கை விடப்பட்டாலும் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹைத்தி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலுள்ள அலஸ்கா மாகாணத்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று புதன்கிழமை 10.15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கண்டறியப்படும் அளவுக்கும் பின்னரும் எடுக்கப்படும் அளவுகள் மாறுபட்டுள்ளது. முதலில் அமெரிக்காவின் புவியியல் மையம் 7.1 ரிக்டர் அளவில் 35 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டது. இதன் பிறகு ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் […]
கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த […]
மிக ஆபத்தான சுனாமி ஒன்று கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ஏற்படவிருப்பதால் கடற்கரையின் மொத்த வணிகத்தையும் அழிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ரிக்டர் அளவில் 7.0-க்கும் அதிகமாக பதிவாகும் ஒரு நிலநடுக்கம் உருவாகும் என்றால் அவை 4 அடி உயர அலைகளாக சுனாமியை உருவாக்கும் என புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சுனாமியானது துறைமுகத்தில் உள்ள வணிகங்களையும், படகுகளையும் சேதப்படுத்தும். மேலும் சான் டியாகோவை பொருத்தவரையில் சுனாமி உருவாவதற்கான அனைத்து […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பூகம்பம் நேற்று மாலை 6.10 மணியில் இருந்து ஏற்பட்டது. இதன் மையமானது இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில், மியாகி […]
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சற்றுமுன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகியுள்ளது. மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடலோர பிராந்திய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குறுகிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் […]
சுனாமியில் இறந்துவிட்டதாக நினைத்த போலீசாரை 16 ஆண்டுகள் கழித்து உயிருடன் பார்த்த அவரது குடும்பம் மகிழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்த சுனாமியால் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயின. இந்த சுனாமி அலைகளானது கடலுக்கடியில் 9 – 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக உருவாகியுள்ளது. மேலும் சுனாமியால் இந்தோனேஷியாவில் சுமார் 1,67,000 உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை […]
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணை அவரது கணவர் இன்று வரை கடலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வந்தனர். அந்த சுனாமியின் போது, Yasuo Takamatsu என்பவரது மனைவி yuko அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தார். மலைப்பகுதியில் இருப்பதால் தனது மனைவிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று Yasuo […]
10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்த பெண்ணின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மியாமி கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் தடவியல் மற்றும் மரபணு சோதனையில் உட்படுத்தியபோது அது சுனாமியில் காணாமல் போன 61 வயதான […]
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இது கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ […]
தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 16-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறாத வடுக்களாக இருந்துவரும் தினமான இன்று டிசம்பர் 26,2004. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 6.29 இந்தோனேஷியாவில் 8.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியா, மாலத்தீவில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சுனாமியாக உருவெடுத்தது. இந்த சுனாமி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டும் […]
சுனாமியின் போது காணாமல் போன ஐந்து வயது மகனை 21 வயதில் தாய் கண்டு பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் சுனாமியின் போது தனது ஐந்து வயது மகனை தொலைத்து 16 வருடங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுனாமி ஏற்பட்ட சமயம் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தேன். சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது எனது ஐந்து வயது மகனை காணவில்லை. சுற்றிலும் […]