தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் லேடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது மண்ணுக்கடியில் அமைந்துள்ளது. இந்த தனி உலகமானது சுரங்கப்பாதையில் இருப்பது தான் மிகவும் சிறப்பு. இந்த சுரங்கப்பாதையில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்ததாகவும் அங்கு தட்பவெப்ப நிலை சரியாக இல்லாததால் மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டதன் காரணமாகவும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1915-ம் ஆண்டு சுரங்கப்பாதை பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு […]
Tag: சுரங்கப்பாதை
பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துவிட்டது இன்னும் 10 […]
தலை நகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் புதிய துணை ஜனாதிபதி மாளிகை பொது தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை […]
பிரான்சையும், பிரித்தானியாவையும் இணைக்கும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் போகும் ரயில் பாதையில் நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பலமணி நேரம் மக்கள் ரயிலுக்குள் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதையடுத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து ரயிலில் இருந்து பயணிகள் அருகிலுள்ள சர்வீஸ் சுரங்கப்பாதைக்குள் நுழைந்துள்ளார்கள். கடலுக்கு அடியில் அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்குள் சுமார் 5 மணி நேரம் செலவிடவேண்டி இருந்ததால் சில பயணிகள் அச்சமடைந்துள்ளார்கள். மேலும் சில பெண்கள் பயத்தில் அழத்தொடங்கியுள்ளனர். […]
ரோம் நகரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்ட நபர் வங்கியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியது தெரிய வந்திருக்கிறது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் நேற்று முன்தினம் சுரங்க பாதை ஒன்று இடிந்து விழுந்தது. அதில் ஒரு நபர் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் சுமார் எட்டு மணி நேரங்களாக போராடி அந்த நபரை மீட்டர்கள். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அந்த நபர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு அந்த பகுதியியை […]
மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் நாராயண்பூர் கிராமம் உள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் திறந்தநிலையில் இருக்கிறது. நேற்று பிற்பகல் 2 மணி அளவில் இந்த ஆழ்துளை கிணற்றையொட்டி விளையாடிக்கொண்டிருந்த ஒரு 5 வயது சிறுவன், அதனுள் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவனை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளை அவர்கள் முடுக்கிவிட்டனர். ஆழ்துளை கிணற்றின் அருகே ஒரு சுரங்கப்பாதை அமைத்து சிறுவனை மீட்கும் […]
கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றனர். கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக காணப்படும். அதனை போல மாநகர பகுதியான ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிக ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் உள்ளன. அது முக்கிய பேருந்து நிலையங்களும் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் எப்பொழுதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மக்கள் கடும் அவதி அடைகின்றன. இதனை […]
அணு உலையை செயலிழக்க செய்யும் பணிகளில் டெக்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானில் கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ஆம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாக கருதப்பட்டு வந்த புகுஷிமா டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் கிடைக்காமல் போனது. மேலும் இதனால் 6 யூனிட்டுகளில் 3 யூனிட்கள் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் இதனை சுற்றியுள்ள […]
சென்ற 22 ஆம் தேதி காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இரு தற்கொலைப் படை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமான சுரங்கப் பாதைகள் வாயிலாக அவர்கள் ஊடுருவி இருக்ககூடும் என கணித்த அதிகாரிகள் எல்லையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் சம்பாவில் சிறியளவில் நிலத்தடியில் இருந்த பள்ளம் ஒன்று சுரங்கப்பாதையாக சென்றது கண்டறியப்பட்டது. இந்திய எல்லையிலருந்து 900 மீட்டர் […]
கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில் இருந்து […]
வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுரங்க பாதைகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதி சுமை இருந்தாலும் […]
சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்தது அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. குறிப்பாக சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் […]
சுரங்கப்பாதைகளில் ராட்ச மோட்டார்கள் கொண்டு ஊழியர்கள் தேங்கியிருந்த மலைநீரை அகற்றி வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் முக்கிய சுரங்கப்பாதைகளான வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி போன்ற பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மழை நீரானது சாலைகளில் தேங்கியுள்ளதால் போலீசார் போக்குவரத்து சேவைகளை மாற்றிவிட்டுள்ளனர். அதிலும் சில சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் 16 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த […]
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முபீன் என்பவரின் வீட்டில் ஜபி என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.அவர் வீட்டின் முன் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 ஆம்தேதி இரவு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதனால் ஜபி பீதியில் இருந்தார். நேற்று மேலும் பல அடிகளுக்கு பள்ளம் ஏற்பட்டதையடுத்து அடுத்து தீயணைப்புத் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜபி வீட்டின் முன் பகுதியில் 30 அடியில் பள்ளம் […]
சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தெற்கில் அமைந்துள்ள மார்சேல் நகரில் இருக்கும் சுரங்கப்பாதையில் 37 வயதான நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சுரங்கப்பாதையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் மூச்சு திணறி அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வருவதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவமானது அங்கு பெரும் […]
குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, […]
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதால், சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். நேற்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாட்களில் கண்டுபிடிக்கும் இரண்டாவது சுரங்க பாதையாகும். இதனால் சர்வதேச எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது. சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உணவு மற்றும் ஆயுதங்களை பாகிஸ்தான் போட்டு செல்வது கடந்த […]
இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை நாளை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மணாலியில் இருந்து லே […]
இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை வருகின்ற அக்டோபர் 3ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. […]
கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் […]