தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சின்னமனூர் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையால் சுருளி அருவி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை அருவியில் குளிக்க சென்ற போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tag: சுருளி அருவி
தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி சிறந்த சுற்றுலா இடமாகவும், புண்ணிய தளமாகவும் உள்ளது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு. ஹைவிவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியிலிருந்து அறிவிக்கு நீர்வரத்து ஏற்படும். தூவானம் ஏறியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி […]
கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அளவில் விளங்கி வருகின்றது. இங்கு அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிக்கு […]
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் […]
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. தற்போது கொரோனா காரணத்தால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு இருக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருவி பகுதியில் இருக்கும் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை வியாபாரிகள் ஊரடங்கை மீறி நேற்று நடந்தது திறந்து வைத்துள்ளனர்.இதுகுறித்து […]